இக்கட்டான சூழலையும் சமாளிக்கும் திறன் பெற்றவர்கள் உத்திரம் நட்சத்திரக்காரர்கள்

உத்திரம் நட்சத்திரம் சூரியனுக்கு உரிய நட்சத்திரங்களில் இரண்டாவது இடத்தைக் கொண்டது. உத்திரம் நட்சத்திரத்தின் முதல் பாதம் சிம்மராசியிலும் இரண்டு, மூன்று மற்றும் நான்காம் பாதங்கள் கன்னி ராசியிலும் இடம் பெற்றுள்ளது.  இந் நட்சத்திரத்தின் ராசிநாதன் சூரியன்.

உத்திரம் நட்சத்திரத்தின் முதல் பாதத்தைக் கொண்ட நீங்கள் குருபகவானை அதிபதியாக கொண்டிருப்பீர்கள். சாஸ்திரங்களில் நம்பிக்கை கொண்டிருப்பீர்கள். தீய குணங்களை வெறுத்து ஒதுக்கும் நீங்கள் அக்குணங்கள் கொண்டிருப்போரையும் பக்கத்தில் வைக்கமாட்டீர்கள். எல்லோரிடமும் அன்பு செலுத்தும் குணமுள்ள வர்களாக இருப்பீர்கள்.

உத்திரம் நட்சத்திரத்தின் இரண்டாவது பாதத்தைக் கொண்டவர்கள் சனியை அதிபதியாக கொண்டிருப்பீர்கள். புகழின் மீது இயல்பாகவே நாட்டமுடையவர்களான நீங்கள்  ஆடம்பர பொருள்களைச் சேர்ப்பதிலும் ஆர்வம் கொண்டிருப்பீர்கள். தலைமை பொறுப்பு வகிப்பதை விரும்பும் உங்களை சுயநலக்காரர்கள் என்றும் சொல்லலாம். உங்களிடம் கொடுக்கும் பொறுப்பை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டீர்கள்.

உத்திரம் நட்சத்திரத்தின் மூன்றாவது பாதத்தைக் கொண்டவர்களான நீங்கள் இரண்டாம் பாதத்தைப் போலவே  சனியை அம்சமாக கொண்டவர்கள். நடக்கும் காரியங்கள் அனைத்துக்கும் காரணகர்த்தா நான் தான் என்று கம்பீரமாக வளையவருவீர்கள்… சுயநலமிக்க உங்களிடம்  பலரும் நெருங்கமாட்டார்கள்.

உத்திரம் நட்சத்திரத்தின் நான்காவது பாதத்தைக் கொண்டவர்களான நீங்கள் குருவை அம்சமாக கொண்டவர்கள். வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளைத் தெரிந்து நடந்துகொள்ளகூடியவர்கள். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவீர்கள்.. உழைப்பதற்கு தயங்கமாட்டீர்கள்…
உத்திரம் நட்சத்திரத்தின் நான்கு பாதங்களைக் கொண்டவர்களுக்கு பொதுவான குணநலன்கள் உண்டு. இறை நம்பிக்கையும் சாஸ்திரத்திலும் நம்பிக்கை கொண்டவர்கள்.  பிடிவாத குணமும், கோபமும் இருந்தாலும் விவேகத்துடனும் நடந்துகொள்வீர்கள்.

சூரியபகவான் நட்சத்திர அதிபதியாக இருப்பதால் மன வலிமை பேச்சாற்றல் எதிலும் குறைவிருக்காது. இக்கட்டான சூழலையும் சமாளிக்கும் திறனை பெற்றிருப்பீர்கள். சிக்கனமாக இருப்பதையே விரும்புவீர்கள். பணி செய்வதை விட பணி கொடுக்கும் முதலாளியாக ஆகுவதையே குறிக் கோளாக கொண்டு வெற்றியும் பெறுவீர்கள்.

Sharing is caring!