இதை செய்தால் போதும் நவக்கிரக தோஷங்கள் மாயமாகும்!

நடக்கும் திசை அறிந்து அதற்கேற்ப அந்த கிரகங்களுக்குரிய பொருட்களால் குளித்து வர, அந்த கிரகங்களால் உண்டாகும் கெடு பலன்களை குறைத்தும், நற் பலன்கள் பெற்றுமவாழலாம்.

மேலும்,ஜாதகத்தில் தற்சமயம் நமக்கு பாதகம் செய்யும் கிரகங்கள் எது என அறிந்து அதற்கேற்பவும் தினசரி குளியல் முறை செய்து வர, நிச்சயம் நற் பலன்கள் பெற்று வாழலாம்.

சூரியன் : கச கசாவை பொடி செய்து , நீரில் கலந்தும் அல்லது, குங்குமப்பூ அல்லது ஏதேனும் சிகப்பு மலர்களை நீரில் போட்ட,ு நான்கைந்து குவளைகள்  குளித்து விட்டு, பின்பு வழக்கம் போல் குளித்து வரலாம்.

சந்திரன் : தயிரை முதலில் உடல் முழுதும் தடவி, சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும்.

செவ்வாய் : வில்வ கொட்டை பொடியை சிறிதளவு நீரில் சேர்த்து குளிக்க வேண்டும்.  செவ்வாய் தோஷத்தால் திருமண வாழ்வில் பிரச்சனைகளை சந்திப்பவர்கள், மற்றும் திருமண தடை போன்றவற்றிற்கு இது சிறந்த பரிகாரம்.

புதன் : மஞ்சள் கடுகுடன் சிறிது தேன் கலந்து, கங்கை நீர் அல்லது கடல் நீர்  சேர்க்கப்பட்ட நீரில், குளிக்க வேண்டும்.

Sharing is caring!