இந்த ஆறு ராசிக்காரர்களும் ராஜயோகம் அதிகம் கொண்டவர்களாம்…!! நீங்களும் இந்த ராசியா..?

இன்றைய இளைஞர்களின் பெரிய ஆசை என்னவென்றால் அவர்கள் விரும்பும் வேலைதான். ஏனெனில் பிடித்த வேலை கிடைப்பதை விட படித்த படிப்பிற்கு வேலை கிடைப்பதே இப்போது பெரிய பிரச்சினையாக இருக்கிறது. எதார்த்தத்தில் வேலைக்கு செல்பவர்கள் வசதியான வாழ்க்கையை வாழ்கிறார்களே தவிர திருப்திகரமான வாழ்க்கையை வாழ்வதில்லை. திருப்திகரமான வாழ்க்கை வாழ வேலைக்கு செல்வதை விட சொந்த தொழில் செய்வதே சிறந்தது.

சொந்தமாக தொழில் தொடங்க மூலதனம் இருந்தால் போதும், ஆனால் அதில் வெற்றிபெற தளராத மனமும், கடின முயற்சியும், உழைப்பும் தேவை. இந்த குணம் இயற்கையாகவே சிலரிடம் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் சொந்தமாக தொழில் தொடங்கும்போது அவர்களின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிக்காரளுக்கு தொழில் ராசி அடிப்படையிலேயே இருக்கும். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் வெற்றிகரமான தொழில் அதிபராக வாய்ப்புள்ளது என்று பார்க்கலாம்.

சொந்த தொழில்:இன்று உலக பணக்காரர் வரிசையில் இருக்கும் அனைவருமே தங்கள் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் வேலையை உதறிவிட்டு சொந்தமாக தொழில் தொடங்கியவர்கள்தான். நீங்கள் விரும்பும் வாழ்க்கையை நீங்கள் நம்பியிருக்கும் வேலை மட்டுமே ஒருபோதும் தர இயலாது. ஒரு குரங்கிடம் 1 வாழைப்பழத்தையும், 100 ரூபாய் பணத்தையும் கொடுத்தால் அது வாழைப்பழத்தைத்தான் வாங்கும். அதற்கு தெரியாது 100 ரூபாய்க்கு எத்தனை வாழைப்பழம் வாங்கலாம் என்று. அதேபோல்தான் ஒரு மனிதனுக்கு ஒரு வேலையையும், தொழில் தொடங்கும் வாய்ப்பையும் கொடுத்தால் அவன் வேலையைத்தான் தேர்வு செய்வான். அவனுக்கும் சொந்த தொழில் மூலம்ஏ எத்தனை பேருக்கு வேலை கொடுக்கலாம் என்று தெரியாது. நீங்களும் அந்த குரங்கு போல இருந்துவிடாதீர்கள். இந்த உலகத்தை மாற்ற முதலாளிகளால்தான் முடியும் என்பதை மறந்து விடாதீர்கள்.

மகரம்:கடின உழைப்பையும் தாண்டி மகர ராசிக்காரர்கள் தொழில் வெற்றிகரமாக இருக்க முக்கிய காரணம் அவர்கள் சரியான நேரத்தில் அனைத்து வேலைகளையும் முடித்து விடுவதுதான். எந்த காரியத்தையும் தள்ளிப்போடாமல் சரியான நேரத்திற்கோ, சரியான சூழ்நிலைக்கோ காத்திராமல் இவர்கள் உடனடியாக செயலில் இறங்கக் கூடியவர்கள். இவர்களை யாரும் தூண்டிவிட வேண்டும் என்ற அவசியமில்லை. ஏன்டா செயலையும் தொடங்கும் முன் அதற்கான திட்டத்துடன்தான் இவர்கள் செயலில் இறங்குவார்கள். ஒருவேளை இவர்கள் நினைத்தபடி காரியங்கள் நடக்கவில்லை என்றால் அதற்கும் மாற்று திட்டம் இவர்களிடம் எப்போதும் தயாராக இருக்கும்.

மிதுனம்: மிதுன ராசிக்காரர்கள் வியாபாரத்தில் சிறந்து விளங்க காரணம் அவர்களுக்கு யாரிடம் எப்படி பேச வேண்டும் என்ற தந்திரம் நன்கு தெரியும். மேலும் பொய்யை உபயோகிக்காமலே இவர்களால் மற்றவைகளை சம்மதிக்க வைக்க முடியும். நன்றாக பேசுபவர்களுக்கு சாதகமாக முடிவெடுக்கவே அனைவரும் விரும்புவார்கள். தங்களின் சௌகரியத்தை தாண்டியும் வேலை செய்ய இவர்கள் தயங்கமாட்டார்கள். தங்களின் சௌகரியத்தை விட்டுகொடுத்தால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றிபெற முடியும் என்பதை இவர்கள் நன்கு உணர்ந்தவர்கள்.

துலாம்:துலாம் ராசிக்காரர்கள் வியாபாரத்தில் சிறந்து விளங்க காரணம் அவர்கள் எப்போதும் பாசிட்டிவாக இருப்பதுதான். வேலை சரியாக நடக்காதபோது அவர்கள் தளர்ந்து போக மாட்டார்கள். அதற்கு பதிலாக எங்கே தவறு நடந்தது அதனை எப்படி சரி செய்யலாம் என்று சிந்திப்பார்கள். எதிர்காலத்தில் அந்த தவறை அவர்கள் மீண்டும் செய்யவும் மாட்டார்கள். தங்கள் திறமை மூலம் எப்போதும் எதிர்மறை இடஙக்ளில் சிக்கி கொள்ளாமல் இருக்கும் தந்திரம் தெரிந்தவர்கள் இவர்கள்.

சிம்மம்:சிம்ம ராசிக்காரர்களை வியாபாரத்தில் தனித்தன்மையுடன் காட்டுவது அவர்களின் நேர்மை ஆகும். மேலும் அவர்கள் தோல்வியை சமாளித்து மேலே வருவதில் அவர்கள் வல்லவர்கள். மற்றவர்களுடன் சேர்ந்து வேலை செய்வதில் இவர்கள் சிறந்தவர்கள் மேலும் மற்றவர்களுக்குள் இருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வருவதிலும் இவர்களும் தனித்துவம் மிக்கவர்கள். சிம்ம ராசிக்காரர்களுடன் வியாபாரத்தில் ஈடுபடுவது வெற்றிகரமான தொழில் இணையாக இருக்கும்.

ரிஷபம்:ரிஷப ராசிக்காரர்கள் ஆர்வம் மற்றும் பொறுமை மிக்கவர்கள். அவர்கள் அவசரமாக எந்த காரியத்தையும் செய்ய மாட்டார்கள், சரியான நேரத்தில் மட்டுமே செய்வார்கள். இவர்களுக்கு எப்போதும் உதவி செய்ய ஆட்கள் இருப்பார்கள், அவர்களின் ஆலோசனை மூலம் இவர்கள் எளிதில் வியாபாரத்தில் வெற்றியை அடைவார்கள். புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளவும், திறமைகளை வளர்த்து கொள்ளவும் இவர்கள் எப்போதும் தயாராக இருப்பார்கள். மற்றவர்களிடம் உதவி கேட்கவோ, செய்த தவறுக்கு பொறுப்பேற்று கொள்ளவோ இவர்கள் எப்போதும் தயங்க மாட்டார்கள்.

கன்னி:கன்னி ராசிக்காரர்கள் வியாபாரத்தில் சிறந்து விளங்க காரணம் அவர்களின் எதார்த்தம், பகுப்பாய்வு குணம் மற்றும் சிறிய தகவல்களை கூட கண்காணிக்கும் குணமாகும். மற்றவர்கள் தங்கள் மீது வைக்கும் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள இவர்கள் தயங்க மாட்டார்கள், மற்றவர்களை நேர்மையாக விமர்சிக்கவும் தயங்கமாட்டார்கள். மற்றவர்கள் கூறும் கருத்துக்களை கேட்டு அதை தீவிரமாக தங்கள் முயற்சிகளில் இணைத்துக்கொள்ள முயலுவார்கள். இதனாலாயே அனைவரும் இவர்களுடன் வியாபார தொடர்பு வைத்துக்கொள்ள விரும்புவார்கள்.

Sharing is caring!