இந்த இரகசியங்களை எவரிடமும் வெளியில் சொல்லக்கூடாதாம்…!

சில விடயங்களை நாம் மற்றவர்களிடம் சொல்லவே கூடாது என்று கூறப்படுகிறது. அது என்னவென்றால், நாம் செய்யும் தானங்களையும் மற்றும் நாம் செய்யும் தர்மங்களையும் யாரிடமும் சொல்ல கூடாதாம். எவ்வளவு நெருங்கிய நண்பர்கள் அல்லது உறவினராக இருந்தாலும் கூட, நமது கஷ்டத்தை அவர்களிடம் பகிர்ந்து கொள்ளக் கூடாது. வீட்டில் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும், அதிலிருந்து வெளியே வர முயற்சிக்க வேண்டுமே தவிர வெளியே யாரிடமும் சொல்லக் கூடாது.நம் வீடுகளில் செய்யும் சடங்குகளும், பூஜைகளையும், கோவிலுக்கு சென்ற அனுபவங்களையும் யாரிடமும் சொல்லக் கூடாது. அது கடவுள் நமக்காக ஏற்படுத்திய அனுபவங்கள் என்பதை உணர வேண்டும்.

அதே போல நமது உடல் நிலையைப் பற்றி ரகசியங்கள் யாருக்கும் தெரியக் கூடாது. ஏனெனில் அதைப் பற்றி மற்றவர்கள் பேசும்போது எதிர்மறை ஆற்றல் ஆற்றல் அதிகம் சேரும் என்பதால் அதனை வெளியே சொல்லக் கூடாது. முக்கியமாக நமது லட்சியங்களை ஒருவருக்கும் சொல்லக் கூடாதாம்.ஒருவரின் வயது குறித்தும், ஒரு பெண்ணின் பெயர் கலங்கப்படும் வகையில் யாரிடமும் பேசக் கூடாது. குடும்பத்தின் ஏற்படும் பிரச்சனைகளை குடும்ப உறுப்பினர்களிடம் மட்டுமே வைத்திருக்க வேண்டும். வெளியில் சென்று தம்பட்டம் அடிக்கக் கூடாதாம்.நாம் வீட்டிற்காக வாங்கும் ஆடம்பர பொருட்களை பற்றி அனைவரிடமும் கூறுவது கூடாது. எதற்காகவென்றால், இவ்வளவு குறுகிய காலத்தில் இதெல்லாம் எவ்வாறு வாங்க முடிந்தது என்று, கண் திருஷ்டி ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே, இந்த ரகசியங்களை எவரிடமும் கூறாமல் இருப்பது நல்லது.

Sharing is caring!