இந்த ஐந்து ராசிகளில் பிறந்தவர்களுடன் இருந்தால் நேரம் போவதே தெரியாதாம்?

அனைவருக்குமே வேடிக்கையானவர்களாக இருக்க பிடிக்கும், வேடிக்கையானவர்களையும் பிடிக்கும். ஏனெனில் வேடிக்கையானவர்களுடன் இருந்தால் நேரம் போவதே தெரியாது. வாழ்க்கையில் இருக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் மருந்தாக இருப்பது சிரிப்புதான்.

அந்த மருந்தை நண்பர்களால் மட்டுமே வழங்க முடியும்.

வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் நண்பர்கள் அருகில் இருக்கும்போது எந்த பிரச்சினையை பற்றியும் கவலைப்பட தேவையில்லை.

ஆனால் இப்படி வேடிக்கையாக இருப்பது அனைவராலும் முடியாத ஒன்றாகும், அது சிலருக்கு மட்டுமே கிடைத்த வரமாகும். சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு இந்த குணம் இயற்கையாகவே இருக்கும்.

இந்த பதிவில் எத்தன ராசிகளில் பிறந்தவர்கள் இயற்கையாகவே வேடிக்கையான குணம் கொண்டவர்கள் என்று பார்க்கலாம்.

மிதுனம்

மிதுன ராசிக்கார்களிடம் எப்பொழுதுமே சொல்வதற்கு ஏதாவது இருந்து கொண்டே இருக்கும். புத்திசாலித்தனமான காரியங்கள் முதல் விளையாட்டான ஜோக்குகள் வரை இவர்களிடம் எப்பொழுதும் தயாராக இருக்கும்.

அதனை கொண்டு எந்த சூழ்நிலையையும் கலகலப்பாக மாற்ற இவர்களால் முடியும். இவர்களின் ஒவ்வொரு வார்த்தையிலும் பல அர்த்தங்களும், வேடிக்கையும் நிறைந்திருக்கும். இதனால் எப்பொழுதும் நண்பர்கள் இவர்களை சுற்றியிருக்க விரும்புவார்கள்.

எந்தவொரு விஷயத்தையும் மற்றவர்கள் பார்க்காத ஒரு கோணத்தில் சிந்தித்து அதில் நகைச்சுவையை சேர்க்க இவர்களால் மட்டும்தான் முடியும். இவர்கள் எவரையும் சிரிக்க வைக்கும் எமகாதகர்களாக இருப்பார்கள்.

கடகம்

அனைத்து சூழ்நிலைகளிலும் இருக்கும் நகைச்சுவையை கண்டறிய இவர்களால் முடியும். ஒரு சிறிய விஷயத்தை கூட நகைச்சுவையாக நினைத்து இவர்களால் சிரிக்க முடியும், மற்றவர்களையும் சிரிக்க வைக்க முடியும்.

இவர்களுடன் வெளியே செல்ல நேர்ந்தால் நம்மை சுற்றியிருக்கும் அனைத்து குட்டி குட்டி அழகான விஷயங்களை கூட இவர்கள் கவனித்து கூறுவார்கள். அதனை வைத்து நம்மை சிரிக்கவும் வைப்பார்கள்.

நாம் கவனிக்க மறந்த விஷயங்களை கவனித்து அதில் நகைச்சுவை செய்வதே இவர்களின் சிறப்பாகும். கடக ராசிக்காரர்களுடன் வெளியே செல்லும் வாய்ப்பு கிடைத்தால் ஒருபோதும் மிஸ் பண்ணிவிடாதீர்கள்.

விருச்சிகம்

இவர்கள் கிண்டல் செய்வதில் மிகவும் வல்லவர்கள். இவர்களை பார்த்தால் அவ்வாறு தெரியாது, ஆனால் அவர்கள் அப்படிப்பட்டவர்கள்தான். வித்தியாசமான சூழ்நிலையை சுட்டிக்காட்ட இவர்கள் ஒருபோதும் தயங்கமாட்டார்கள்.

இவர்களின் கிண்டல்கள் மிகவும் ரசிக்க கூடியவையாக இருக்கும். கடினமான சூழ்நிலைகளில் கூட இவர்கள் எப்படி அதனை நகைச்சுவையாக கையாள வேண்டும் என்று இவர்களுக்கு தெரியும்.

இவர்களின் கருத்துக்கள் சிலசமயம் முரட்டுத்தனமாக இருப்பது போல தோன்றலாம் ஆனால் உண்மையில் இவர்கள் விளையாட்டாகத்தான் கூறுவார்கள்.

தனுசு

தங்களுடைய ஒவ்வொரு அனுபவத்திலும் நகைச்சுவையை கண்டுபிடிக்க கூடியவர்கள் இவர்கள். எப்போதும் மற்றவர்களிடம் கூறுவதற்கு இவர்களுக்கென சுவாரஸ்ய கதைகள் இருக்கும்.

இவர்களின் கதை சொல்லும் முறை சாதாரண கதையை கூட சுவாரஸ்யமான கதையாக மாற்றக்கூடியவர்கள். மற்றவர்களை சிரிக்க வைப்பதற்காக இவர்கள் சிலசமயம் பொய்கள் கூட கூறுவார்கள்.

மற்றவர்கள் இவர்களை ஜோக்கராக நினைப்பார்கள் ஆனால் இவர்கள் அதனை சீரியசாக எடுத்து கொள்ளமாட்டார்கள். மற்றவர்களின் முகத்தில் சிரிப்பதை பார்ப்பது இவர்களுக்கு பிடித்த ஒன்றாகும்.

கும்பம்

வேடிக்கை குணம் இவர்களுக்கு இயற்கையாகவே இருக்கும் குணமாகும். மற்றவர்கள் வயிறு வலிக்க சிரிப்பதை பார்க்கும் வரை இவர்களுக்கு தாங்கள் செய்தது நகைச்சுவை என்ற உணர்வே வராது.

அனைத்து சூழ்நிலைகளிலும் எப்படி நகைச்சுவையை பார்க்க வேண்டும் என்று மற்றவர்களுக்கு இவர்கள் சொல்லித்தருவார்கள். தங்களை போலவே மற்றவர்களையும் மாற்ற வேண்டும் என்று நினைப்பதோடு அதற்கு முயலவும் செய்வார்கள். இவர்களின் புத்திசாலித்தனமான வேடிக்கையான செயல்கள் அனைவரையும் ரசிக்க வைக்கும்.

Sharing is caring!