இந்த ஒரு உணவை சாப்பிட்டால் நீரிழிவு தீவிரமடையும்!

நீரிழிவு என்பது ஒரு நோயல்ல அது ஒரு பற்றாக்குறை. உடலில் இரத்த சர்க்கரையின் அளவு அதிகமாகி, இன்சுலின் அளவு குறைந்திருப்பதைத் தான் நீரிழிவு.

நீரிழிவு இருந்தால், உண்ணும் உணவில் கவனமாக இருக்க வேண்டும்.

சக்கரை நோயாளிகள் அதிகாலை உணவாக கார்ன் ப்ளேக்ஸ் சாப்பிடுகின்றார்கள். இது ஆரோக்கியமானதா என்று அறிந்து கொண்டு இனி சாப்பிடுங்கள்.

என்ன தான் கார்ன் ப்ளேக்ஸ் சோளத்தைக் கொண்டு செய்யப்பட்டாலும், அதில் செயற்கை சுவையூட்டிகள் மற்றும் க்ளைசீமிக் இன்டெக்ஸ் அதிக அளவில் உள்ளது. இதனால் இரத்த சர்க்கரை அளவு அதிகரித்து, நீரிழிவு தீவிரமடையவும் வாய்ப்புள்ளது.

கார்ன் ப்ளேக்ஸில் புரோட்டீன் குறைவாக உள்ளது. அதனால் தான் இதனை உட்கொண்ட பின்னரும் பசி உணர்வு இருக்கும். பின் உணவில் கட்டுப்பாடின்றி, கண்ட உணவுகளை உட்கொண்டு, நீரிழிவின் தீவிரத்தை சந்திக்க நேரிடும்.

இரத்த சர்க்கரையின் அளவை நார்ச்சத்துள்ள உணவுகள் கட்டுப்படுத்தும் மற்றும் இதய பிரச்சனைகள் ஏதும் நேராமல் பாதுகாக்கும். ஆனால் கார்ன் ப்ளேக்ஸில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால், இதனை உட்கொண்டு வருவதால் எவ்வித நன்மையும் விளையப் போவதில்லை.

கார்ன் ப்ளேக்ஸில் சோடியம் உள்ளது. ஆய்வுகளில் ஒரு கப் கார்ன் ப்ளேக்ஸில் 1 பாக்கெட் உருளைக்கிழங்கு சிப்ஸில் உள்ளதை விட அதிகமாக சோடியம் நிறைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனால் இரத்த அழுத்தம் அதிகரித்து, இதய நோயால் பாதிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது.

குறிப்பு

சக்கரை நோயாளிகள் சாப்பிடும் உணவு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். இது போன்ற உணவுகள் ஆபத்தினை ஏற்படுத்தும். மீறி சாப்பிட விருப்பினால் மருத்துவ ஆலோசனைகளின் பின்னர் சாப்பிடவும்.

Sharing is caring!