இந்த செடியும் விதையையும் பார்த்துள்ளீர்களா?

கார்போகரிசி என்பது ஒரு செடி வகையைச் சேர்ந்த மூலிகை. குறிப்பாக இது ரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளையும் சருமத்தில் ஏற்படக்கூடிய நோய்களை சுலபமாக தீர்க்கக் கூடிய ஆற்றல் உண்டு. இந்த செடியை நாம் நிறைய இடங்களில் பார்த்திருப்போம்.

ஆனால் இதன் மகத்துவம் தெரிவதில்லை. நாட்டு மருந்து கடைகளில் இதன் விதைகள் எளிதாகக் கிடைக்கின்றன. வாங்கிப் பயன்படுத்த முடியும். அந்த மூலிகையைப் பற்றிய முழு விவரங்களையும் பற்றி இந்த பகுதியில் தெரிந்து கொள்ளலாம்.

பிறப்பிடம்

கார்போகரிசி ஒரு செடி வகையைச் சேர்ந்தது. இது சீனா மற்றும் இந்தியாவைத் தான் பிறப்பிடமாகக் கொண்டது. இந்த செடி ஏறக்குறைய மூன்று அடி தூரம் வளரும் தன்மை கொண்டது. இது நல்ல செழிப்பான இடங்களில் வளரக்கூடிய தன்மை கொண்டது. அகல அகலமான இலைகள் கொண்டிருக்கும். கொத்து கொத்தாக வளரும்.

எப்படி இருக்கும்?

நல்ல செழிப்பான இடங்களில் வளரக்கூடிய தன்மை கொண்டது. அகல அகலமான இலைகள் கொண்டிருக்கும். கொத்து கொத்தாக வளரும் இந்த செடியில் ஒவ்வொரு கிளையிலும் 8 முதல் 12 பூக்கள் வரை பூக்கும். இந்த பூக்கள் முதிர்ச்சியடைந்து காயாக மாறிவிடும். இந்த விதைகளில் இருந்து எண்ணெய்கள் எடுக்கலாம்.

இந்த செடியில் உள்ள இலைகள், விதைகள்ஈ வேர் ஆகிய எல்லாமே மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன. இதை சில இடங்களில் விற்பனைக்காகவே பயிரடப்படுகின்றன. இந்த காய்கள் பழுத்து விதையாகி வெளிவரும். கருப்பு நிற விதைகள் கொண்டது. இதிலிருந்து ஒருவித வாசனை வெளிவரும். அதன்பின்பே இதை அறுவடை செய்வார்கள்.

வருமானம்

இந்த விதைகளை அறுவடை செய்து வெயிலில் காய வைக்க வேண்டும். ஒரு ஹெக்டேர் அளவு நிலத்திலேயே கிட்டதட்ட 2000 கிலோ விதைகள் கிடைக்கும். இதிலிருந்து எண்ணெய் கூட எடுப்பார்கள். வருடாந்திர செலவுகள் 30 ஆயிரம் ஆகும். ஆனால் கிட்டதட்ட ஒரு லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.

மருத்துவ பயன்கள்

தோல் வியாதிகளைக் குணப்படுத்துவதற்கு இந்த கார்போக அரிசி எண்ணெய் பயன்படும். உடலுக்குப் புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியது. இந்த கார்புாகரிசி செடியின் வேரும் பல நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.

நோய் தீர்க்கும்

மருந்து வைரஸால் பாதிக்கப்படும் வயிற்றுப் போக்கு போன்றவற்றை குணப்படுத்த உதவுகிறது. வயிற்றுப் புண்கள், சருமப் புண்களை ஆற்றுவதற்குப் பயன்படுகிறது.

பழத்தின் நன்மைகள்

இந்த கார்போகரிசி செடியின் பழங்களின் மூலம் வாந்தி, மூலம், ரத்த சிவப்பணுக்களின் குறைபாட்டால் ஏற்படுகின்ற இரத்த சோகை, சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஆகியவற்றைக் குணப்படுத்த உதவுகிறது.

தலைமுடி

கார்போக அரிசியின் எண்ணெய் மற்றும் இலைகள் தலைமுடி வளர்ச்சியைத் தூண்டுவதற்குப் பயன்படுகிறது. சிறுநீரகக் கோளாறுகள் கார்போகரிசி வயிற்று சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், முதுகு வலி ஆகியவற்றைச் சரிசெய்வதோடு சிறுநீரகம் சம்பந்தப்பட்ட கோளாறுகளைச் சரிசெய்வதற்கு பயன்படுகிறது. ஆண்மைத்தன்மை கார்போகரிசி ஆண்மையை அதிகரிக்கச் செய்யவும் விந்துக்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யவும் விறைப்புத் தன்மையை அதிகரிக்கவும் செய்கிறது. தாது விருத்தியை அதிகரிக்கச் செய்கிறது.

தோல் நோய்கள்

கார்போகரிசி, நீரடி முத்து, கஸ்தூரி மஞ்சள், கோரைக்கிழங்கு, சந்தனப் பொடி, அகில், கல்பாசி, வெட்டிவேர், குருவி வேர் ஆகியவற்றைச் சேர்த்து இடித்து சூரணமாகச் செய்து அதை குளிப்பதற்கு முன் உடலில் பூசிக்கொண்டு, அதை ஊறவிட்டு நன்றாகத் தேய்த்துக் குளித்தால் சருமத்தில் உள்ள நோய்கள், சொறி, சிரங்கு, சரும வடுக்கள் ஆகியவற்றைச் சரிசெய்யும். சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.

Sharing is caring!