இந்த நாளில் கருடனை தரிசித்தால் வேண்டும் குழந்தை பிறக்கும்!

மஹாவிஷணுவின் வாகனமான கருடனை தரிசனம் செய்வது பெரும் புண்ணியம். கருடனை தரிசனம் செய்தால், நம்மை பிடித்த  தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

எந்த திதியன்று, கருட தரிசனம் செய்கிறோமோ, அந்தத் திதியின் அதிதேவதையின் அருளாசியும், சுபிட்சங்களும் நமக்கு கிடைக்கும்.
கண்திருஷ்டி தோஷங்கள் போன்ற தீவினைகள் நசியவும், பலவித எதிர்வினை சக்திகள் செயலிழக்கவும், வளர்பிறை பிரதமையன்று கருட தரிசனம்  செய்ய வேண்டும்.

குபேர சம்பத்து உண்டாக தேய்பிறை பிரதமை அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.

சந்திர தோஷங்கள் விலக, வளர்பிறை திரிதியை அன்று, கருட தரிசனம் செய்ய வேண்டும்.

விநாயகப்பெருமானின் அனுக்கிரகம் கிடைக்க ‘வளர்பிறை சதுர்த்தி’ அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.

கருட பகவானுக்கு உரிய திதி பஞ்சமி ஆகும். எனவே ஆவணி மாதம் வருகின்ற கருட பஞ்சமி மிகவும் சிறப்பு. பொதுவாக பஞ்சமி திதி அன்று கருட தரிசனம் செய்வதால் ஈடு இணையற்ற சுப பலன்கள் உண்டாகும்.

Sharing is caring!