இந்த பழத்தின் கொட்டையை சாப்பிட்டால் பல நன்மைகள் கிடைக்குமாம்!

அவகேடா பழத்தில் கொழுப்புச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம், விட்டமின் C, K, B6 மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது.

அவகேடோ பழ கொட்டையின் நன்மைகள்
  • புற்றுநோய் தாக்கியவர்களுக்கு அவகோடா பழம் அதிகமாக கொடுத்தால் அது நோய் எதிர்ப்புத்தன்மையை அதிகரிக்கும். இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளை கட்டுப்படுத்தும்.
  • அவகேடோவில் உள்ள கேட்டசின்கள் மற்றும் ப்ரோசியானிடின்ஸ், சக்தி வாய்ந்த ஆன்டி – இன்ஃப்ளமேட்டரிகளாக செயல்பட்டு முட்டி வலி மற்றும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது.
  • உடலில் சர்க்கரையின் அளவினைக் கட்டுப்படுத்துகின்றது. செரிமான பிரச்சினைகளையும் சரிசெய்யக்கூடியது. மேலும் இரைப்பை குடல் பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
  • அவகேடோவின் கொட்டையில் ஃப்ளேவனால் நிறைந்து உள்ளது. அதனால் அது நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, காய்ச்சல் மற்றும் சளி தொல்லைகள் வராமல் பாதுகாக்கிறது.
  • வலிப்பு நோய், வயிற்றுப்போக்கு, மனச்சோர்வு, தசைகளின் சோர்வு மற்றும் வலி, கட்டிகளின் வளர்ச்சி ஆகிய பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
  • கெட்ட கொழுப்புகளை குறைத்து நல்ல கொழுப்புகளின் அளவை அதிகரிக்க செய்து உடற்பருமன் ஏற்படுவது தடுக்கப்படுகின்றது.
  • இரத்த அழுத்த பிரச்னையால் அவதிப்படுபவர்களுக்கு மிகச் சிறந்ததாகும். இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.
  • அவகோடா பழத்திலுள்ள சேர்மங்கள் எலும்புகள் வலிமையடைகின்றன.கண்களின் பார்வை திறன், புரை வளர்தல் ஆகியவை கட்டுப்படுத்தப்படுகின்றது.

Sharing is caring!