இந்த பழத்தை ஒரு முறையாவது சாப்பிட்ருக்கீங்களா??

கிவனோ என்பது ஒரு வகை முலாம்பழம் ஆகும். இந்த வகை முலாம்பழம் அமெரிக்கா, சிலி, போர்ச்சுக்கல், இத்தாலி, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் கிடைக்கிறது. இந்த வகை மரங்கள் சகாரா பாலைவனத்தில் சுற்றியுள்ள நாடுகளை அடிப்படையாகக் கொண்டது. மேலும் இந்த பகுதிகளில் இந்த வகை மரங்கள் அதிகமாக காணப்படுகிறது.

இதன் மருத்துவ குணங்கள் காரணமாக இந்தியாவில் மேல்தட்டு பழக்கடைகளில் இந்தப் பழம் இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படுகிறது.

கிவனோ என்ற பெயர் நியூசிலாந்து நாட்டில் இந்த பழத்திற்கு கொடுக்கப்பட்டது அதற்கான காரணம் இந்தப் பழம் கிவி பழத்தை போல் உள்ளே இருப்பதால் இது கிவனோ என அழைக்கப்பட்டது.

முள் முலாம் பழம்

முள் முலாம் பழம் என்ற பெயர் பரவலாக அழைக்கப்படும் மற்றொரு பெயராகும். இதன் காரணம் இந்தப் பழம் வெளியே ஆரஞ்சு நிறத்தில் அல்லது தங்க நிறத்தில் காணப்படும். பழத்தின் வெளிப்புறத்தில் சிறு முட்கள் காணப்படும். பழத்தின் உள்ளே கிவி பழத்தில் உள்ளது போல் கூழ்போன்று காணப்படும். இந்த பழம் பலவிதங்களில் உடல்நலத்திற்கு உதவுகிறது.

இந்தப் பழங்கள் நாட்பட்ட நோய்களை குணமாக்கவும், உடல் எடையை குறைப்பதற்கும், சருமத்தை பாதுகாக்கவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும் இந்த பழத்தை உண்பதன் மூலம் கண்கள் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம். இந்தப் பழம் செரிமானத்தை அதிகரிக்கும். மேலும் இந்த வகை பழம் காயங்கள் குணப்படும் வேகத்தை அதிகரிக்க உதவுகிறது.

பூர்வீகம்

இந்த மரத்தின் இலைகளும் வேர்களும் பல வகைகளில் உபயோகப்படுகின்றன. இந்தப் பழம் அதிக விலை உயர்ந்த குணமாகும். இந்த பழத்தின் விதைகளை ஏராளமான சத்துக்கள் உள்ளன. எனவே இந்த பழத்தின் விதைகள் உடல் நலத்தின் மேன்மைக்காக பயன்படுத்தப்படுகின்றது.

இந்த வகை பழங்கள் ஆப்பிரிக்காவின் சஹாரா பாலைவனம் பகுதிகளில் ஓர் அடிப்படை உணவுப் பொருளாகும். இந்த பழங்கள் அதிக நீர்ச்சத்து கொண்டுள்ள பழங்களாகும். காணப்படும் நீர் தட்டுப்பாட்டை சரி செய்வதற்கான நீர்ச்சத்து இந்த பழங்களில் உள்ளது. மேலும் இந்த பழங்களில் அதிக அளவில் பாலைவன பகுதிகளுக்குத் தேவையான சத்துக்கள் உள்ளன.

மேலும் மரங்கள் எந்த வகை சூழ்நிலையிலும் வளரும் தன்மை உடையது. இந்த வகை பழங்களை உண்பதன் மூலம் பாலைவனப் பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் நீர் தேவைகளையும் உணவு தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்கின்றனர்.

உடல் எடை குறைத்தல்

இந்த பழத்தில் 80 சதவீதம் நீர் உள்ளது மேலும் இந்த பழத்தில் அதிகமான ஊட்டச்சத்துக்களும் உள்ளது. இந்த பழத்தை உண்பதன் மூலம் அதிக பசியில் இருந்து விடுபட முடியும் எப்படி எனில் இந்த உணவு தேவையான ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது. மேலும் அதிக அளவில் நீர் இருப்பதால் வயிறு நிறைந்த ஒரு திருப்த்தியை தருகிறது. இந்தப் பழத்தைத் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் மேலும் அதிக உணவு உண்பதைத் தவிர்ப்பதன் மூலம் உடல் எடை குறையும்.

ஆண்டி ஆக்ஸிடென்ட்ஸ்

இந்த பழத்தில் ஆல்ஃபா-டோகோபரோலின் (alpha-tocopherol)அதிக அளவு உள்ளது. இது விட்டமின் ஈ யின் ஆக்ஸிஜனேற்றியின்(Antioxidant) வடிவமாகும். இது நரம்புகள் மற்றும் இரத்த நாளங்களின் ஆரோக்கியத்திற்காக மிகவும் முக்கியமானது. இது உடலில் தோன்றும் நச்சுப்பொருட்களை சமன் செய்வதற்கு(அழிப்பதற்கு (neutralize)) இது உதவும்.

கண்பார்வை அதிகரித்தல்

இந்த பழத்தில் விட்டமின் ஏ மிக அதிக அளவில் காணப்படுகிறது. விட்டமின் ஏ ஒரு வகையான கரோட்டினாய்டு ஆகும், இது கண் ஒரு ஆக்ஸிஜனேற்றியாக(Anti Oxident) செயல்படுகிறது. இது கண் பார்வையை சரி செய்ய மற்றும் அதிகரிக்க உதவுகிறது. இந்தப் பழங்களை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் கண்புரை ஏற்படுவதை தடுக்கலாம்.

அறிவாற்றலை அதிகரித்தல்

முதுமையில் ஏற்படும் ஞாபக சக்தி குறைபாட்டிற்கு வைட்டமின் ஒரு காரணியாகும். இந்த வகை பழத்தில் வைட்டமின் இ அதிக அளவில் உள்ளது. மேலும் இதில் உள்ள ஆல்ஃபா-டோகோபரோலின்(alpha-tocopherol) சுறுசுறுப்பாகவும் மூளையை புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ள உதவுகிறது.

வளர்சிதை மாற்றத்தை அதிகரித்தல்

மனித உடலுக்கு ஜிங்க்(Zinc) சத்து மிகவும் முக்கியமான ஒன்றாகும். உடலில் புரோட்டீன் உருவாக்கத்தில் ஜிங்க் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிக அளவில் புரோட்டீன் சத்து இருக்கும் போது உடலில் ஏற்படும் காயங்கள் விரைவில் குணமாகும். மேலும் உடல் பாகங்களிலும் திசுக்களிலும் இரத்த நாளங்களிலும் செல்களிலும் ஏற்படும் குறைபாடுகளை சரி செய்வதற்கும் ப்ரோட்டீன் சத்து அவசியமாகும். இந்தப் பழத்தில் காணப்படும் அதிக விட்டமின் சி சிங் சத்தை உடலுக்கு அளிக்கிறது. இதன் மூலம் உடலின் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கிறது.

முதுமையை தடுத்தல்

இந்த பழத்தில் காணப்படும் விட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி சத்துக்கள், அதிக அளவிலான கரிம சேர்மங்கள்(organic compounds), இயற்கையான ஆக்சிசனேற்றிகள் உடலின் உள்ளும் புறமும் ஆரோக்கியத்தை அதிகரித்து முதுமையை தடுக்கின்றன.

இந்த வகை பழங்கள் உடலின் சர்மத்தில் ஏற்படும் வடுக்கள் மற்றும் காயங்களினால் ஏற்பட்ட தழும்புகளை மறைக்கின்றன மேலும் சுருக்கங்களை தடுக்கின்றன. அதிக அளவிலான ஊட்டச்சத்துக்கள் உடலின் பாகங்களுக்கு தேவையான சத்துக்களை அளித்து அவை சிறப்பாக செயல்பட உதவுகின்றன. உள்ளும் புறமும் சிறப்பாக செயல்பட்டால் முதுமை தன்மை இல்லாமல் இளமையாக வாழலாம்.

மன அழுத்தம், பதட்டத்தை குறைத்தல்

கிவனோ பழத்தில் உள்ள கரிம சேர்மங்கள் உடலில் உள்ள ஹார்மோன்களின் சமநிலையில் ஏற்படும் குறைபாடுகளை சரி செய்கின்றன. குறிப்பாக அட்ரினலின் மற்றும் மன சோர்வை உருவாக்கும் ஹார்மோன்களை கட்டுப்படுத்துகிறது. இதன் மூலம் நீண்ட நாட்களாக உள்ள மன அழுத்தத்தில் இருந்து விடுபட இயலும். இந்த பழங்களை தொடர்ந்து உண்பதன் மூலம் உடலும் மனமும் சம நிலைக்கு திரும்பும்.

உணவு செரிமானம்

கிவனோ பழத்தில் உள்ள அதிக நார் சத்துக்கள் செரிமானத்தை அதிகரிக்கின்றன இதன் மூலம் வாயு பிரச்சனை மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட முடியும். இதுகுடல் இயக்கங்களை வழக்கமான முறையில் வைத்திருத்தல் மற்றும் தசைப்பிடிப்பு, வீக்கம், மலச்சிக்கல் மற்றும் வயிற்று புண்களை போன்ற கடுமையான நிலைமைகளை தடுக்கிறது.

இதில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. மேலும் இன்சுலின் வாங்கிகளை கட்டுப்படுத்துகிறது இதன் மூலம் இன்சுலின் சுரத்தல் சரிசெய்யப்பட்டு நீரிழிவு நோய் வராமல் தடுக்கப்படுகிறது.

எலும்புகளை பலப்படுத்த

எலும்புகளின் வளர்ச்சிக்கு கால்சியம் சத்து மிகவும் அவசியம் இது எலும்புகளை தலமாகவும் உறுதியுடனும் வைத்துக் கொள்ள உதவும். இந்த கிவனோ பழம் எலும்புகளின் வலிமையை அதிகரிக்கிறது இதில் அதிக அளவில் கால்சியம் மற்றும் இதர தாதுப்பொருள்கள் உள்ளன. எலும்புகளையும் வலிமைப்படுத்தவும் எலும்பு புரை வராமல் தடுக்கவும் இந்தப் பழம் உதவும். இவை எலும்புகளின் வளர்ச்சி மற்றும் எலும்புகளின் குறைபாடுகளை சரி செய்தல் ஆகியவற்றிற்கு உதவுகிறது.

கிவனோவின் காய்கள்

இந்த வகை பழங்களை பழுப்பதற்கு முன்னர் காய்களாக உண்டால் அதில் சில ஆபத்தான வேதிப்பொருட்கள் உள்ளன. இந்த வேதிப்பொருள்கள் தலைவலி காய்ச்சல் அல்லது வயிற்றுப் போக்கை உண்டாக்கும். இவை உயிர்க்கொல்லிகள் அல்ல ஆனால் பழங்கள் முழுமையாக விளைந்த பின்னர் அவற்றை உண்பது நலம். இந்த பழங்களினால் எந்த ஒரு ஒவ்வாமையும் ஏற்படாது.

Sharing is caring!