இந்த பழம் புற்றுநோயை குணப்படுத்துமா???

முள் சீதாப்பழத்தை கடைதெருக்களில் நாம் பார்த்திருப்போம். இந்த பழமானது நிறைய நோய்களையும் குணப்படுத்துமாம். அப்படி என்னென நோய்களை குணப்படுத்த பயன்படுகிறது என்று பார்ப்போம்..

மாரடைப்பை தடுக்க

இந்த முள் சீதாப்பழம் மாரடைப்பைத் த்டுக்க உதவுகிறது. மேலும் அதிக அளவு பொட்டசியம் நிறைந்திருக்கிறது. உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்கி, இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. முள் சீதா மரத்தின் இலைகளை கொண்டு டீ போட்டு குடித்து வந்தால் மாரடைப்பை குணமாக்கும்.

புற்றுநோய் குணமாக்க

முள் சீதாப்பழம் புற்றுநோயைக் குணப்படுத்துவதில் மிகச்சிறந்து செயலாற்றுகிறது. அதிக அளவில் ஆண்டிஅசிடோன் இருப்பதால், உடலுக்கு அதிகளவில் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.

சர்க்கரை நோயளிகள் சாப்பிடலாம்

இந்த பழத்தில் இனிப்பாக இருக்கும் என்றால் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா என்ற சந்தேகம் வேண்டாம். தாராளமாக இந்த முள் சீதாப்பழத்தை சாப்பிடலாம். இந்த பழம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவுகிறது. ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும்.

எடை குறைப்பு

நம்முடைய உடலில் உள்ள கொழுப்புகளை கரைப்பதற்கு இந்த முள் சீதாப்பழம் உதவுகிறது. உடலில் அதிகமாக கொழுப்புகள் தேங்கியுள்ள திசுக்கள் தொடை, வயிற்றுப்பகுதிகளில் உள்ள கொழுப்புகளை குறைக்க உதவுகிறது.

Sharing is caring!