இந்த பாவங்களுக்கு பரிகாரமில்லை

பாவம் ஓரிடம் பழி ஓரிடம் என்பது பூலோகத்தில் வேண்டுமானால் சாத்திய மாகலாம். ஆனால் தெய்வங்களின் இருப்பிடத்தில் அது சாத்தியமாகாது.  அறியாமல் செய்த பாவத்தை விட அறிந்து செய்த பாவங்கள் மேலும் மேலும் அவனை துன்புறுத்தும்.. யாருக்கு தெரிய போகிறது என்று செய்யும் அனைத்து பாவங்களுக்கும் சாட்சியாக சூரியனும் சந்திரனும் இருக்கிறார்கள் என்கிறது மனு தரம சாஸ்திரம்.

பாவம் செய்தால் என்ன.. பரிகாரம் செய்துவிடலாம் என்ற எண்ணங்கள் கூட தவறுதான். அறியாமல் செய்த பாவங்கள் உரிய பரிகாரங்கள் மூலம் நிவர்த்தி ஆவதற்கு கூட இறைவனது அருள் வேண்டும். ஆனால் தர்மவாழ்விலிருந்து விலகி அநீதியை செய்யும் போது அதற்கு பரிகாரமும் கிடையாது  இறைவனிடம் மன்னிப்பும் கிடையாது.

பகவத் கீதையில் கண்ணனும்,  இராமயணத்தில் வால்மீகியும் பாவங்களைப் பற்றி கூறியிருக்கிறார்கள். செய் நன்றி மறப்பது பாவம், புறமுதுகு காட்டி ஓடு பவனை கொல்வது பாவம்,  பெண்களைத் துன்புறுத்துதல் பாவம்,பசுக்களின் பாலை பெறாமல் அதைக் கொன்று தின்பது, பெண்களின் கருவை அழிப்பது,  அந்தணருக்கு தீமையை உண்டாக்குவது என தர்மத்தை மீறி செய்யும் பாவங்கள் இன்னும்  உண்டு. இவையெல்லாம் கூட பரிகாரத்தில்  உண்மையை உணர்ந்து மீண்டும் செய்யாமல் இருந்தால் அதிலும் இறைவன் இளகினால் மட்டுமே  நிவர்த்தி ஆகும். ஆனால் அகிலத்தை ஆளும் அகிலாண்டேஸ்வரனின் கோபத் துக்கு ஆளாகும் பாவங்கள் எத்தகைய பரிகாரத்திலும் தீராது.

காமத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து பிறரின் மனைவி/ கணவன் மீது ஆசைப்படுவது   பாவத்தை சேர்க்கும்.  குழந்தைகள், கர்ப்பிணிகள், வயதான முதியவர்களைத்  துன்புறுத்துதல் தகாத முறையில் பெண்களிடம்  நடத்தல் போன்றவற்றுக்கு பாவத்தில் நிச்சயம் தண்டனை உண்டு. நியாயமான முறையில் சம்பாதிக்காமல் அடுத்தவர்களது சொத்தை அபகரிக்க முயல்வதும் பாவக்கணக் கில் சேரும். செய்த தவறை ஒப்பொக்கொள்ளாமல் இயலாதவர்களின் மீது திணிப் பது மகா பாவமாகும். தானம் செய்ததை சொல்லிக்காட்டுவதும் திரும்ப பெறு வதும் கூட பரிகாரமில்லாத பாவச்செயல்கள் தான்.  பிறர் மனம் நோக  செய்யும்  மாபாதக செயல்கள் அவர்களை  கொல்வதற்கு சமம்,  மற்றவர்களது வாழ்வு பறிபோகும் வகையில் செய்யும் வஞ்சமிக்க செயல்கள் மன்னிக்கவே முடியாத பாவ குற்றம்.

இத்தகைய பாவங்களை யார் செய்தாலும் இதற்கு பரிகாரம் என்பது நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும் தண்டனையில் மட்டுமே பூர்த்தியாகும்.  தெய்வம் நின்று கொல்லும் என்பார்கள். ஆனால் நடக்கும் கலியுகத்தில் தெய்வமும்  அன்றே  கொல்கிறது தண்டனை என்னும் வாயிலாக என்பதை கண்கூடாக பார்த்துவருகிறோம்…

யாருக்கும் பயப்படவேண்டாம்.. ஆனால் அனைத்தையும் அறிந்த ஆண்ட வனுக்கு பயப்பட்டு பாவம் செய்யாமல் இருப்போம். பரமனின் அருள் பெறுவோம்.

Sharing is caring!