இந்த பொருட்களை தானமாக தந்தா வாங்கிவிடாதீர்கள்..

ஒரு சில பொருட்களை மற்றவர்களிடமிருந்து வாங்க வேண்டிய அவசியம் நமக்கு ஏற்படுவது உண்டு. அது போல் இலவசமாக நாம் வாங்கும் சில பொருட்கள் நமக்கும், நம் குடும்பத்திற்கும் தரித்திரத்தை ஏற்படுத்துமா? என்பதை நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.

அந்தவகையில், சில உலோகங்கள் மற்றவர்களிடமிருந்து நம்முடைய கைகளுக்கு வரக் கூடாது என்று கூறப்படுகிறது. அப்படி இருக்கும் பொழுது நம்மை அறியாமல் நாம் இலவசமாக வாங்கும் சில பொருட்கள் நமக்கு பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறது சாஸ்திரம்.

எந்த பொருட்களை நாம் மற்றவர்களிடத்திலிருந்து வாங்கக் கூடாது? அப்படி வாங்கினால் என்ன நடக்கும்? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

நாம் திருமண வீடுகளுக்கு அல்லது விசேஷங்கள் நடக்கும் ஏதாவது ஒரு இடத்திற்கு செல்கிறோம் என்றால், போகும் பொழுது சில பரிசுப் பொருட்களை நமக்கு கொடுக்கிறார்கள். அப்படிக் கொடுக்கப்படும் பொருட்களில் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்கள் இருந்தால் அதை நாம் இலவசமாக பெற்றுக் கொள்வதால் சில பாவங்கள் நமக்கு வந்து சேருமாம்.

மேலும், இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்கள் சனி பகவானுக்குரிய காரகத்துவம் வாய்ந்தவை. இவற்றை புதிதாக நாம் வாங்கும் பொழுதே நாள், கிழமை எல்லாம் பார்க்க வேண்டி இருக்கும். அப்படி இருக்கும் பொழுது இனாமாக மற்றவர் கைகளில் இருந்து நாம் வாங்கினால், அவர்களுடைய பாவம் நமக்கு வந்து சேரும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

இது போன்ற விசேஷங்களில் எவர் சில்வர் பாத்திரம் தானே கொடுக்கிறார்கள்? அதில் எங்கே இரும்பு இருக்கிறது? என்று யோசிக்காதீர்கள். எவர் சில்வர் பாத்திரத்திலும் இரும்பு கலக்கப்பட்டு இருக்கும்.

புதிதாக வாங்கிய எவர் சில்வர் பாத்திரத்தில் காந்தம் பயன்படுத்தினால் உங்களுக்கே தெரிந்து விடும். இரும்பு சம்பந்தப்பட்ட எந்த பொருட்களையும் மற்றவர்களிடமிருந்து இனமாக நாம் பெறக் கூடாது

Sharing is caring!