இந்த ராசிக்காரர்கள் தங்கம் அணிந்திருந்தால் உடனே கழற்றி எறியுங்கள்!

உலகின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் ஒரு சக்தியாக இருப்பது தங்கம் ஆகும்.

உலகம் முழுவதும் தங்கம் வியாபாரத்திற்கு பயன்படுத்தப்பட்டு வந்தாலும் இந்தியாவில் அது ஒரு அலங்கார பொருளாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

உலகில் தங்கத்தை அதிகம் உபயோகிக்கும் இரண்டாவது நாடாக இந்தியா இருக்கிறது. ஒவ்வொரு உலோகமும் நமக்கு ஒவ்வொரு பயனை வழங்கக்கூடியதாக இருக்கும்.

இது மட்டுமின்றி தங்கம் அணிவது உங்கள் குடும்பத்திற்கு செல்வத்தையும், வளத்தையும் கொண்டுவரும். இந்த பதிவில் தங்கத்தை எப்படி அணிந்தால் உங்களுக்கு அதிர்ஷ்டமும், செல்வமும் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

தங்கம் அணிவது மேஷம், கடகம், சிம்மம் மற்றும் தனுசு ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

விருச்சிகம் மற்றும் மீன ராசிக்காரர்களுக்கு இது கலவையான முடிவுகளை ஏற்படுத்தும். ரிஷபம், மிதுனம், கன்னி மற்றும் கும்ப ராசிக்காரர்களுக்கு இது சில பிரச்சினைகளை உண்டாக்கும்.

துலாம் மற்றும் மகர ராசிக்காரர்கள் தங்கம் அணிவதை தவிர்ப்பதே அவர்களுக்கு நல்லது.

தங்கம் உங்களுக்கு பல நன்மைகளை வழங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் அதனை எப்படி அணிகிறோம் என்பதை பொறுத்தே அதன் முழுமையான பயனை பெறமுடியும். பெண்கள் எப்பொழுதும் தங்க மோதிரத்தை இடது கையில் அணிய வேண்டும், ஆண்கள் வலது கையில் அணிய வேண்டும்.

உங்களுக்கு எந்த விஷயத்திலும் கவனம் இல்லை என்றாலும், கவனசிதறல்கள் பிரச்சினை அதிகம் இருந்தாலும் நீங்கள் ஆள்க்காட்டி விரலில் தங்க மோதிரம் அணிய வேண்டும். இதன்மூலம் உங்கள் வாழ்க்கையில் அமைதி திரும்பும்.

குழந்தை செல்வம் என்பது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்று. அது உங்கள் வாழ்க்கையில் இல்லாத போது உங்கள் மோதிர விரலில் தங்கத்தை அணியவும். இது உங்கள் வாழ்க்கையில் மழலை செல்வத்தை வழங்கும்.

உங்களுக்கு வயிறு தொடர்பான மற்றும் எடை தொடர்பான பிரச்சினைகள் இருந்தால் நீங்கள் தங்கம் அணிவதை தடுக்க வேண்டும். அதிக கோபப்படுபவர்களும் தங்கம் அணிவதை தவிர்க்க வேண்டும்.

உங்கள் ஜாதகத்தில் வியாழனின் ஆதிக்கம் அதிகம் இருந்தாலும் தங்கம் அணிவதை தவிர்க்கவும். இரும்பு மற்றும் நிலக்கரி தொடர்பான வியாபாரத்தில் இருப்பவர்களும் தங்கம் அணிவது தவிர்க்க வேண்டும்.

கர்ப்பிணி மற்றும் வயதான பெண்களும் தங்கம் அணிவதை தவிர்ப்பது நல்லது.

இடுப்புக்கு கீழே எப்போதும் தங்கம் அணியாதீர்கள். இது உங்கள் வாழ்வில் துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் மேலும் உங்கள் பணவரவை குறைக்கும்.

தங்கம் என்பது லட்சுமி தேவியின் அடையாளமாக கருதப்படுகிறது அதனை இடுப்பு கீழே அணிவது லட்சுமி தேவிக்கு செய்யும் அவமதிப்பாகும். இதனால் உங்கள் வாழ்க்கையில் பணரீதியான பல பிரச்சினைகள் எழும்.

Sharing is caring!