இந்த ராசிக்காரர்கள் யதார்த்தமானவர்களாம்…..???

இன்றைய உலகில் யதார்த்தமானவர்களுக்கு மற்றொரு  பெயர் பிழைக்கத் தெரியாதவர்கள் என்பதாகும். ஏனெனில், எதார்த்தமானவர்கள் எப்பொழுதும் அனைவரின் நலனிலும் அக்கறை செலுத்துவார்கள். கடந்த தலைமுறை வரை கூட, யதார்த்தமானவர்கள் அதிகம் இருக்கத்தான் செய்தார்கள். ஆனால், இப்பொழுதுதான் அந்த எண்ணிக்கை குறைந்து விட்டது.யதார்த்தமானவர்கள் எப்பொழுதும் வாழ்க்கையை நேர்மறையாக பார்ப்பார்கள் இதுவே அவர்களுக்கு பாதி வெற்றியைத் தந்துவிடும். அதிக உணர்ச்சிவசப்படுவதோ, கோபப்படுவதோ, இவர்கள் அகராதியில் கிடையாத பழக்கமாகும். இந்த யதார்த்த குணம் சிலருக்கு பிறவியிலேயே வந்துவிடும், அதற்கு அவர்களின் பிறந்த ராசி முக்கியமான காரணமாக இருக்கும். இந்தப் பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் யதார்த்தமானவர்களாக இருப்பார்கள் என்று பார்க்கலாம்.மகரம்: மகர ராசிக்காரர்கள் மிகவும் எதார்த்தமானவர்களாக இருப்பார்கள். உட்கார்ந்து கருத்து பேசுவதை காட்டிலும் இறங்கி வேலை செய்வது நல்லது என்று நினைப்பார்கள். தன்னுடைய எண்ணமும், கருத்தும் சிதையாத வண்ணம் திட்டமிடுவார்கள். அவர்கள் இரு முடிவை எடுப்பதற்கு முன்னால் அனைத்து வழிகளை பற்றியும் சிந்திப்பார்கள். இவர்களின் சிறப்பே இவர்களின் பொறுமைதான். ஏனெனில், விரும்பிய முடிவை அடைய அதிக நேரம் தேவைப்படும் என்று எதார்த்தமானவர்களுக்கு நன்கு தெரியும். ஆரம்பப்புள்ளி சரியாக வைக்கப்பட்டால், முடிவு எதிர்பார்ப்பது போல இருக்கும் என்று இவர்கள் அறிவார்கள்.கன்னி:உங்களுக்கு எப்போதெல்லாம் தேவையோ அப்போதெல்லாம் கன்னி ராசிக்காரர்கள் அங்கிருப்பார்கள். பிரச்சினைகளை எப்படி சமாளிக்க வேண்டும் இன்று இவர்களுக்கு நன்கு தெரியும். இது அவர்களை எதார்த்தமானவராக மட்டுமின்றி நம்பிக்கைக்கு உரியவர்களாகவும் மாற்றும். கற்பனை உலகில் வாழ்வது இவர்களுக்கு பிடிக்காது. இன்பமோ, துன்பமோ எதார்த்தத்தை எதிர்கொண்டு வாழவே இவர்கள் விரும்புவார்கள். இவர்கள் எதிலும் நிதானமாகவும், நியாயமாகவும் இருப்பார்கள். தனது அனைத்து செயல்களுக்குமான நியாயங்கள் இவர்களிடம் தயாராக இருக்கும்.

மேஷம் : இவர்களை அதீத யதார்த்தமானவர்கள் என்று கூற இயலாது. ஆனால் பல விஷயங்களில் இவர்கள் யதார்த்தமானவர்கள்தான். இவர்கள் எந்தவொரு சாகசத்திலும் ஈடுபவடுவதற்கு முன் அதற்கு தேவையானவற்றை சம்பாதித்து கொள்ள வேண்டும் என்ற தெளிவான சிந்தனை உள்ளவர்கள். தன்னை பற்றிய இவர்களின் கணிப்பு எப்பொழுதும் சரியானதாக இருக்கும், தன்னால் முடியாத காரியத்தை ஒப்புக்கொண்டு விழிபிதுங்கி நிற்கமாட்டார்கள். எனவே, அந்த வேலையை செய்யகூடிய ஒருவரை நியமித்து அந்த வேலையை செய்து முடிப்பார்கள். இவர்கள் திட்டமிட்டு செயல்படுபவர்களாக பார்த்தால் தெரியாது. ஆனால், தனக்கு தேவையானவற்றை சரியாக பெற்றுக்கொள்வார்கள்.ரிஷபம் : இவர்களின் சிந்தனை எப்பொழுதும் யதார்த்தமானதாக இருக்கும், எதார்த்தமான செயல்களில் இவர்கள் மிகவும் சௌகரியமாக உணருவார்கள். உறுதியான எண்ணம் கொண்ட இவர்கள் எந்தவொரு செயலையும் எப்படி எளிதாக அதேசமயம் வெற்றிகரமாக செய்ய வேண்டும் என்று நன்கு அறிவார்கள். சிந்திக்காமல், எந்தக் காரியத்திலும் இவர்கள் இறங்க மாட்டார்கள். அதனால், இவர்கள் அனைத்திலும் எச்சரிக்கையாக இருப்பார்கள். வெளித் தோற்றத்தை பார்த்து இவர்கள் ஒருபோதும் ஏமாந்து விடமாட்டார்கள். இவர்கள் உங்களுடன் இருப்பது உங்களுக்கு யானைபலம் போன்றது.மிதுனம்: மேலோட்டமாக பார்க்கும் போது மிதுன ராசிக்காரர்கள் மிகவும் கவனக்குறைவானவர்களாக தோன்றலாம். ஆனால் உண்மையில் அவர்கள் மிகவும் யதார்த்தமானவர்கள். பெரிய காரியத்தையும் எப்படி சாதிக்க வேண்டும் என்று நன்கு திட்டமிட தெரிந்தவர்கள் இவர்கள். இந்த ராசி பெற்றோர்கள் தங்கள் குழந்தையை எப்படி யதார்த்தமாக வளர்க்க வேண்டும் என்று நன்கு அறிவார்கள், தேவையில்லாத எந்த அழுத்தத்தையும் அவர்கள் மீது திணிக்க மாட்டார்கள். குழந்தைகளாகவே தன் தவறை உணரும்படி செய்வார்களே தவிர. இவர்களாக அவர்களை துன்புறுத்த மாட்டார்கள்.

Sharing is caring!