இந்த வகை உணவுகளால் விரைவில் மரணத்தை சந்திக்க நேரிடும்

உணவே உயிர் வாழ அத்தியாவசியமான ஒன்று ஆனால், பின் வரும் உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டால் கட்டாய மரணம் நிகழும் என்கின்றனர் ஆய்வாளார்கள். அத்தகைய உணவுகளை பற்றி தெரிந்து கொள்வதோடு, இவ்வகையான உணவுகளை சாப்பிடாமல் தவிர்க்கவும் முற்படுவோம்.

தக்காளி சாஸ்:

கேனில்  அடைக்கப்பட்டு விற்கப்படும் தக்காளி சாஸில் சர்க்கரை கலக்கப்பட்டிருக்கும். இந்த சாஸை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் உடல்பருமன், நீரிழிவு, இதய தமணியில் அடைப்பு போன்ற பெரிய பிரச்னைகளை சந்திக்க நேரிடும். எனவே கடைகளில் ரெடிமேடாக கிடைக்கும் தக்காளி சாஸிற்கு பதில் வீட்டில் சர்க்கரை இல்லாமல் தக்காளி சாஸ் தயாரித்து பயன்படுத்துவதே நல்லது.

சோடா கலந்த பானங்கள்:

சோட கலந்த குளிர் பானங்களை தொடர்ந்து அருந்தி வந்தால், மோசமான உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடும். இந்த வகை பானங்களால், முறையற்ற வளர்சிதை மாற்றம், நீரிழிவு, சரும கோளாறுகள், குழப்பமான  மனநிலை, பல் நோய், செரிமான கோளாறு போன்ற பிரச்னைகளை சந்திக்க நேரிடும். குளிர் பானத்திற்கு பதிலாக நல்ல சுத்தமான தண்ணீரை அருந்துவதே நம்மை நோய்களிலிருந்து பாதுகாக்கும்.

வெள்ளை சர்க்கரை:

சர்க்கரை நமது மனதை விரைவில் அதன் சுவைக்கு அடிமையாக்கும் தன்மை கொண்டது. வெள்ளை சர்க்கரையை அதிகமாக சாப்பிட்டால், உடலில் கொழுப்புகள் படிவதை ஊக்குவிக்கும். இதனால், உடல் பருமன், இதய நோய் போன்ற ஆபாயத்தை அதிகரிக்கிறது. உணவில் சர்க்கரைக்கு பதில் தேன் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

பதப்படுத்தப்பட்ட இறைச்சி:


பதப்படுத்தப்பட்ட இறைச்சியை சாப்பிடுவதனால்  புற்றுநோய், இதய நோய், நீரிழிவு, குழந்தைகளின்  கற்றல் குறைபாடு, எதிர்மறை எண்ணம் போன்றவற்றை உண்டாக்கும். எப்பொழுதும் புதிதாக கிடைக்கும் இறைச்சிகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும்.

தாவர எண்ணெய்கள் :


தாவரங்களிலிருந்து எடுக்கப்படும் எண்ணெகள் சிலவற்றால், இதய நோய், உடல் பருமன், புற்றுநோய், மற்றும் அல்சைமர் பொன்ற ஆபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே  எண்ணெய் வாங்கும் பொழுது GMOவை கவனிக்க வேண்டும்.

ஹாட் டாக்ஸ்:

ஹாட் டாக்ஸ் அதிகமாக சாப்பிடுவதால் புற்று நோய், இதய நோய், உடல் பருமன் போன்ற பாதிப்புகளுக்கான வாப்புகள் அதிகரிக்கும்.

வறுத்த உருளைகிழங்கு சிப்ஸ்:

வறுத்த உருளைகிழங்கு சிப்ஸ் சாப்பிடுவதால் பெருங்குடல் புற்றுநோய், மார்பக புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் மலக்குடல் புற்றுநோய் ஆகியவற்றை சந்திக்க நேரிடும்.

செயற்கை இனிப்பான்கள்:

குறைவான கலோரிகளைக் கொண்டிருக்கும், என எண்ணி இனிப்பிற்கு பதிலாக ஆர்டிபிஸியல் இனிப்புகளை பயன்படுத்துவதனால்.  நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் வளர்சிதை மாற்ற நோய் ஆகிய ஆபத்துக்களை சந்திக்க நேரிடும்.

தினசரி மது அருந்துதல்:

மதுவில் அதிகப்படியான கலோரிகள் இருக்கின்றன, இந்த மது வகைகளை தொடர்ந்து அருந்தி வந்தால்,  நீரிழிவு, கல்லீரல் சேதம், எடை அதிகரிப்பு, மன அழுத்தம் மற்றும் தோல் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

வெள்ளை ரொட்டி;

வெள்ளை வண்ணம் கொண்ட மாவுகளில் அதாவது மைதா போன்றவற்றில் தயாரிக்கப்படும் ரோட்டியால் எடை அதிகரிப்பு, தைராய்டு பிரச்னை மற்றும் உள் உறுப்புகளில் கோளாறு ஏற்படுதல், செரிமான பிரச்னையை சந்திக்க நேரிடும்.

பால் சார்ந்த பொருட்கள்;

 குறைந்த ஊட்டச்சத்து கொண்ட பால் பொருட்கள் மூட்டுவலி, புற்றுநோய், ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமா ஆகியவற்றை ஏற்படுத்தும். எனவே அதற்கு பதிலாக‌ தேங்காய் பால் அல்லது பாதாம் பால் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

பார்பிக் முறையில் சமைக்கப்படும் இறைச்சிகள்:

பார்பிக் முறையில் சமைக்கப்படும் இறைச்சிகளில் கலக்கப்படும் ரசாயனங்கள் கணைய புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோய் ஆபத்துக்களை  விளைவிக்கும்.

Sharing is caring!