இந்த 5 ராசிக்காரங்களும் கடும் சக்தி வாய்ந்தவங்களாம்..!

அனைவரும் ஆழமாக சிந்திப்பவர்களாக இருக்க மாட்டார்கள். கடந்த தலைமுறையில் ஆழமாக சிந்திப்பவர்களும், தத்துவார்த்தமாக சிந்திப்பவர்களும் அதிகமாக இருந்தனர். ஆனால் இன்றைய தலைமுறையில் அவ்வளவாக ஆழமாக சிந்திப்பவர்கள் இல்லை என்றுதான் கூற வேண்டும்.

ஆழமாக சிந்திப்பது சிலருக்கு இயற்கையாகவே கிடைத்த வரமாக இருக்கும் . அதற்கு அவர்கள் பிறந்த ராசி கூட ஒரு காரணமாக இருக்கலாம். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் ஆழமாக சிந்திப்பவர்களாக இருப்பார்கள் என்றார் பார்க்கலாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களின் மூளையை பார்க்க நேர்ந்தால் அதில் பலவிதமான அறிவியல் மற்றும் கணித சிக்கல்களும் அதற்கான தீர்வுகளும் இருக்கும்.

இவர்கள் மிகவும் ஆழமாக சிந்திக்க கூடியவர்களாக இருப்பார்கள். மற்றவர்களின் பிரச்சினைகளுக்கு அவர்களின் இடத்தில் இருந்து சிந்தித்து அதற்கான தீர்வையும் சிந்திப்பார்கள். மற்றவர்கள் ஒரு விஷயத்தை சிந்திக்கும் விதத்திற்கும் இவர்கள் சிந்திக்கும் விதத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும்.

கும்பம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு அடுத்து அதிக ஆழமாக சிந்திக்க கூடியவர்கள் இவர்களாகத்தான் இருக்கும். அதற்கு காரணம் இவர்களின் மனது எப்பொழுதும் ஒரு எல்லைக்குள் இருக்காது, நினைத்த இடத்திற்கு செல்லவும், விரும்புவதை நினைக்கவும் ஒருபோதும் அஞ்சாது.

இவர்களின் சிந்தனைகள் எப்பொழுதும் கற்பனைகள் நிறைந்ததாகவும், மற்றவர்களால் நினைக்க முடியாததாகவும் இருக்கும்.

கடகம்

அதிக உணர்ச்சிவசப்பட கூடிய கடக்க ராசிக்காரர்கள் எப்பொழுதும் அதிகமாக சிந்திக்க கூடியவர்களாகவும் இருப்பார்கள். இவர்களின் ஒவ்வொரு சிந்தனையும் ஒரு உணர்ச்சியுடன் தொடர்புடையதாக இருக்கும்.

உணர்ச்சிகள் நிறைந்தவர்களிடம் இருந்து வரும் சிந்தனைகள் எப்பொழுதும் வலிமை வாய்ந்ததாக இருக்கும். மற்ற ராசிக்காரர்கள் அறிவுபூர்வமாக சிந்திக்கும் போது இவர்கள் இதயபூர்வமாக சிந்திப்பவராக இருப்பார்கள்.

மிதுனம்

இவர்களின் சிந்தனைகள் இரு எல்லைகளில் இருக்கும். ஒன்று நேர்மறையாக இருக்கும், மற்றொன்று எதிர்மறையாக இருக்கும். இவர்கள் ஆக்கபூர்வமாகவும், சாகசமாகவும் சிந்திப்பது இவர்களின் ஆழமான சிந்தனைக்கு எடுத்துக்காட்டாகும்.

எனவே இவர்கள் மர்மங்களை வெளிக்கொண்டு வர எப்போதும் பயப்படமாட்டார்கள். இதனாலேயே மிதுன ராசிக்காரர்கள் அறிவியல் மற்றும் கலைத்துறையில் சிறந்து விளங்குகிறார்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களை மேலோட்டமாக பார்த்தால் துலாம் ராசிக்காரர்கள் விளையாட்டுத் தனமானவர்களாகவும், வசீகரமானவர்களாகவும் தெரிவார்கள். ஆனால் உண்மையில் இவர்கள் ஆழமான சிந்தனையாளர்கள்.

விளையாட்டுத்தனமானவர்கள் ஆழமாக சிந்திக்க மாட்டார்கள் என்ற கருத்தை பொய்யாக்குபவர்கள் இவர்கள். இவர்கள் மற்ற மனிதர்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ள விரும்புவார்கள் அதற்காகவே இவர்கள் அதிகம் சிந்திப்பார்கள். மனிதர்களை மனதை படிப்பது என்பது அவ்வளவு சுலபமானதல்ல ஆனால் அது இவர்களுக்கு மிகவும் எளிதானதாகும்.

Sharing is caring!