இந்த 5 ராசிக்காரர்களுக்கு தங்களது அதிசக்தி என்ன என்பது அவர்களுக்கே தெரியாதாம்!

12 ராசிகளுள் எந்தெந்த ராசிக்காரர்கள் தான் எவ்வளவு சக்தி வாய்ந்தவர்கள் என்பது தனக்கே தெரியாமல் இருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் எப்பொழுதும் ஒன்று அதிக நிறைவானவர் அல்லது வீணானவர் என்று விவரிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் மற்றவர்களின் தோற்றத்தை மேம்படுத்த உதவுவதில் பிஸியாக இருப்பார்களே தவிர தங்களின் தோற்றத்தில் அக்கறை செலுத்த மாட்டார்கள்.

அவர்கள் எவ்வளவு கவர்ச்சிகரமானவர்கள் என்பது அவர்களுக்கே தெரியாது.

இவர்களின் சுயமரியாதைக்கு ஒரு பிரச்சினை நேரும் வரை அவர்கள் தங்களின் சிறப்பு என்னவென்பதை உணரமாட்டார்கள்.

மீன ராசிக்காரர்களின் சிறப்பு என்னவென்பது அனைவருக்கும் தெரியும் இவர்களைத் தவிர.

கடகம்

கடக ராசிக்காரர்கள் அவர்களுக்கு பெரிய மனது இருப்பதையும், மற்றவர்கள் மீது அக்கறை இருப்பதையும் அறிவார்கள் ஆனால் அவர்களின் இந்த குணங்கள்தாம் மற்றவர்களை இவர்களை நோக்கி ஈர்க்கிறது என்று இவர்கள் எண்ணுகிறார்கள்.

இது ஓரளவிற்கு உண்மையாக இருக்கலாம் ஆனால் இது மட்டுமே இவர்களை அனைவரும் விரும்புவதற்கான காரணம் இல்லை.

கடக ராசிக்காரர்களின் கவர்ச்சியும் எப்பொழுதும் மற்றவர்கள் இவர்களை சுற்றியிருக்க ஒரு காரணமாகும்.

கடக ராசிக்காரர்கள் நல்லவர்கள் மட்டுமல்ல வசீகரமானவர்கள் கூட, இவர்களின் படைப்பாற்றலும், கனிவும் கூட இவர்களை நோக்கி ஈர்க்கும் குணங்கள்தான்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் தன்னுடைய மிகச்சிறிய தோல்விகளுக்கும், குறைபாடுகளுக்கும் கூட இவர்கள் சோர்ந்து போய்விடுவார்கள். ஆனால் தான் எவ்வளவு சிறந்தவர்கள் என்றோ தன்னுடைய வசீகரம் என்னவென்றோ இவர்களுக்கு தெரியாது. கன்னி ராசிக்காரர்கள் புத்திசாலிகளும் கூட அவர்களை வசீகரமாக்கும் குணங்களில் இதுவும் முக்கியமான ஒன்றாகும். இவர்கள் எப்பொழுதும் மற்றவர்களை பார்க்காமல் தன்னை எத்தனை பேர் ரசிக்கிறார்கள் என்று கவனிக்கத் தொடங்கினாலே இவர்கள் தங்களின் பெருமையையும், சிறப்பையும் உணர்ந்து கொள்வார்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் தங்களின் திறமையும், அர்ப்பணிப்பும் எவ்வளவு சிறந்தது என்று வேலையை பொறுத்த வரையில் இவர்கள் நன்கு அறிவார்கள்.

ஆனால் தன்னுடைய தனிப்பட்ட வசீகரம் பற்றிய சந்தேகம் இவர்களுக்கு எப்போதுமே இருக்கும். ஒருவேளை இவர்களுக்கு தாங்கள் எவ்வளவு கவர்ச்சியானவர்கள் என்று தெரிந்தாலும் ஒருவர் மீது இவர்கள் ஆர்வம் காட்டத் தொடங்கும்போது தான் இவர்களுக்கு தங்கள் மீது அதிக சந்தேகம் ஏற்படும்.

தங்களின் தோற்றம் மற்றவர்களை கவர்வதில்லை என்று இவர்கள் நினைக்கிறார்கள் ஆனால் பெரும்பாலும் இவர்கள் ஈர்க்கிறார்கள் என்பதுதான் உண்மை.

மற்றவர்கள் இவர்களை பாராட்டாத போது இவர்களின் பாதுகாப்பின்மை வலுப்படுகிறது, அதனை அவர்கள் விரும்புவதில்லை.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு எப்போதுமே அவர்களின் தோற்றம் மீதும், வசீகரம் மீதும் பெரிய சந்தேகம் இருக்கும்.

அதனை இவர்கள் எப்போதும் உணர்வதில்லை. மகர ராசிக்காரர்களை போல இவர்களும் பாராட்டுக்கள் கிடைக்காத போது தங்களின் வசீகரம் மீது சந்தேகம் இருக்கும், ஆனால் மற்றவர்களோ இவர்களுக்கு தங்களை பற்றி தெரியும் என்று நினைப்பதால் இவர்களை பாராட்டுவதில்லை.

துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை அவர்களுக்கு எப்போதும் தன்னுடைய தோற்றம் பற்றிய பாராட்டுக்கள் தேவை, மற்றவர்களைக் காட்டிலும் இவர்களுக்கு அதிகம் தேவைப்படும். ஆனால் இவர்கள் வசீகரமானவர்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

Sharing is caring!