இன்று சிவனை வழிபட்டால் பாவங்கள் மாயமாகும்!

புரட்டாசி மாதம் இறை வழிபாட்டிற்கு உகந்த மாதம் என்பது அனைவருக்கும் தெரியும். புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபடுவது உன்னத வாழ்வை அருளும் என்பது  தெரியும்.

அதே வேளையில் புரட்டாசியில் வரும் பவுர்ணமி நாளில், சிவபெருமானை வழிபடுவது பலவித பாவங்களைப் போக்கும். இதற்கு புராணத்தில் ஒரு கதை உள்ளது.

கிருச்சமதர் என்ற முனிவர், விநாயகரை நோக்கி தவமிருந்து, சிவபெருமானைத் தவிர வேறு எவராலும் அழிக்க முடியாத ஒரு மகனை பெற்றார்.  மகனுக்கு பலி என பெயர் வைத்தார்.

தந்தையை போலவே, விநாயகரை நோக்கி தவமிருந்த பலி, ‘மூன்று உலகங்களையும் அடக்கியாளும் வல்லமையை தனக்கு தந்தருள வேண்டும்’ என்ற வரத்தைக் கேட்டான்.

அந்த வரத்தை அவனுக்கு அளித்த விநாயகர், மேலும் பொன், வெள்ளி, இரும்பால் ஆன, மூன்று உலோக கோட்டையையும் கொடுத்து அருள்புரிந்தார்.

வரங்களை அளித்த விநாயகர், பலியை எச்சரிக்கை செய்யவும் தவறவில்லை. ‘நான் வழங்கிய வரங்களைக் கொண்டு, நீ தவறான பாதையில் சென்றால், சிவபெருமானின் திருக்கரத்தில் உள்ள கணை ஒன்றினால், உன்னுடைய கோட்டைகள் அழியும். நீ என்னுடைய பக்தன் என்பதாலும், சிவபெருமானால் சம்ஹாரம் செய்யப்படுவதாலும் உனக்கு மோட்சம் கிடைக்கும்’  என்றார்

Sharing is caring!