இயற்கையுடன் ஒன்றிய வாழ்வு… அகத்திய முனிவர் நூறு ஆண்டுகள் வாழ்ந்தமைக்கு காரணம் இது தானாம்…!

அறிவியல் வளர்ச்சி இன்று எவ்வளவோ வளர்ந்துள்ளது. இதனால் எல்லா துறையிலும் அறிவியலினால் பலவித மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இது இன்றைய சூழ்நிலை தான். ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்னர் இந்த அளவிற்கு அறிவியலின் வளர்ச்சி இல்லை. அப்போது மருத்துவ துறை மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்திருக்கும் என நாம் நினைப்போம். ஆனால், இதற்கு மாறாக தான் அன்றைய மருத்துவம் இருந்தது.இன்றைய மருத்துவம் போலவே பல்வேறு வகையில் இதன் வளர்ச்சி இருந்தது. இதற்கு மூல காரணமே அன்று இருந்த சில சித்தர்கள் தான். அதில் அகத்திய மாமுனியை குறிப்பிட்டு சொல்லலாம். இவரின் பணி, மருத்துவ துறையில் சிறப்பானதாகும். அதுவும் இயற்கை மருத்துவத்தில் இவரின் பங்கு மிக முக்கியமானதாக இன்றும் பார்க்கப்படுகிறது.

இவரின் நீண்ட ஆயுட்காலத்தை பற்றி பலவித ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அன்றைய காலத்தில் சித்தர்கள் எந்தவித வழி முறைகளை பின்பற்றி வந்தார்கள் என்றும், அகத்திய முனிவர் என்ன வழிகளை மேற்கொண்டார் என்பதையும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.பல முனிவர்களை பற்றி நாம் அறிந்திருப்போம். ஆனால், அகத்திய முனிவர் அவர்கள் எல்லோரிலும் சற்று சிறப்புமிக்க ஒருவராக உள்ளார். இவரின் ஓலைச்சுவடி குறிப்புகள் மனித வாழ்வில் மிக முக்கிய அங்கமாக உள்ளது. இவர் கடலையே குடிக்கும் அளவிற்கு தன்மை கொண்டவர். இவரின் வரலாறு தெரிந்தால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.முன்னொரு காலத்தில் அரக்கர்கள் பூமியில் உள்ள மக்களை துன்புறுத்தினார்கள். அப்போது அவர்களை அழிக்க வாயு பகவான் மற்றும் அக்னி பகவான் ஆகிய இருவரும் சேர்ந்து அகத்தியாராக அவதரித்தார்கள். இவரின் அவதாரத்தை கண்டு அரக்கர்கள் பயந்து கடலுக்குள் ஒளிந்து கொண்டனர். இவர்களை அழிக்க முழு கடல் நீரை குடித்து, கடலை வற்ற செய்து அரக்கர்களை அழித்தார். இவரின் இந்த சிறப்பை இன்றும் பல கோவில்களில் சிற்பமாகவோ, கல்வெட்டாகவோ பார்க்க இயலும்.அகத்திய மாமுனி போன்றோர் இயற்கை வழி மருத்துவதையே கடைபிடித்து வந்தனர். இதனால் தான் அவர்கள் நீண்ட ஆயுளுடன் உயிர் வாழ்ந்தார்கள். உண்ணும் உணவு முறை முதல் செய்யும் வேலை வரை எல்லாவற்றிலும் இயற்கை அவர்களை சூழ்ந்திருந்தது. இது அவர்களின் வாழ்வை அதிக இன்பத்துடன் வாழ வைத்தது.

இன்று ஆண்களும், பெண்களும் பல வகையில் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக ஒரு உயிரை உயிர்ப்பிக்க முடியாமல் கஷ்டப்படுகின்றனர். பாலியல் சார்ந்த பிரச்சினைகளை தீர்க்க அந்த காலத்திலே சில வைத்திய முறைகளை கடைப்பிடித்து வந்தனர். அதில் இந்த வைத்தியம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.இதற்கு தேவையான பொருட்கள்… பூனைக்காலி விதை நெல்லிக்காய் தேன்.நெல்லிக்காயை இளம் வெயிலில் காய வைத்து வற்றல் போல ஆக்கி கொண்டு பொடியாக அரைத்து கொள்ளவும். அதன்பின் பூனைக்காலி விதைகளையும் பொடியாக்கி கொள்ள வேண்டும். இவை இரண்டையும் சமமான அளவு எடுத்து கொண்டு தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால், எளிதாக பாலியல் சார்ந்த பிரச்சினைகள் குணமாகும்.உடல் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே எதையும் சாதிக்க இயலும். இல்லையேல் பலவித ஆபத்துகள் நம்மை நோக்கி வர தொடங்கும். 3 வேளையும் தவறாது உணவு உண்ண வேண்டும். குறிப்பாக காலை உணவை எக்காரணத்தை கொண்டும் தவிர்க்கவே கூடாது என அகத்தியரின் குறிப்புகள் சொல்கின்றன. மேலும், சாப்பிட கூடிய உணவு நிச்சயம் ஆரோக்கியமானதாக இருத்தல் வேண்டும்.

வாழ்க்கைக்கு பணம், பதவி, அந்தஸ்து, போன்றவற்றை விட மிக முக்கியமானது மன நிம்மதி தான். நிம்மதி நம்மை விட்டு சென்று விட்டால் அவ்வளவு தான். பிறகு முழு வாழ்வும் மூழ்கி விடும். ஆதலால், எப்போதும் உங்களை மன நிம்மதியுடன் வைத்து கொள்ளுங்கள். இது தான் உளவியல் மற்றும் உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தை தர கூடிய வழி.ஆரோக்கியம் என்பது சாதாரணமாக வந்து விடாது. நீண்ட ஆயுள் வேண்டும் என நினைத்தால் மட்டும் போதாது. அதற்கு நாமும் நம்மை சுற்றி இருக்கும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இதுதான் நீண்ட ஆயுளுக்கான உண்மையான திறவுகோல் என அகத்தியர் உரைக்கிறார்.இப்போது போன்று முன்பெல்லாம் தனி தனியாக பிரிந்து வாழவில்லை. இப்படிப்பட்ட சூழலை கூட நம்மால் உருவாக்க இயலவில்லை என்பதே வேதனை. குடும்பத்தின் நலன் நம்மை ஆரோக்கியமாக வைத்து கொள்ளும் சிறந்த திறவுகோல். நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் சண்டை, சச்சரவு இல்லாமல் வாழ்க்கையை நடத்த வேண்டும்.

Sharing is caring!