இரகசியம்…ஐயப்பனுக்கு நெய் தேங்காய் கொண்டு செல்வது ஏன்?

சபரிமலை ஐயப்பன் மனித வாழ்வைத் துறந்து சபரிமலையில் ஐக்கியமானார். அவரைக்காண வளர்ப்புத் தந்தையான பந்தள மன்னர் அடிக்கடி செல்வார்.

செல்லும் பாதை படு மோசமாக இருக்கும். அவரது இருப்பிடத்தை அடைய பல நாட்களாகும். மகனைக் காண செல்லும் தந்தை பண்டங்களை கொண்டு செல்வார்.

நீண்ட நாட்கள் செல்ல வேண்டும் என்பதால் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக நெய்ப்பண்டங்களை கொண்டு செல்வார்.

நெய்ப்பண்டம் அதிக நாள் கெட்டுப்போகாமல் இருக்கும். இந்த வழக்கத்தின் காரணமாகத்தான் பிற்காலத்தில் ஐயப்பனுக்கு நெய் தேங்காய் கொண்டுபோகும் பழக்கம் ஏற்பட்டது.

இதேவேளை, இருமுடி தாங்கி செல்லும் பக்தர்கள், இருமுடிபையை தம்முடனே வைத்து கொள்ள வேண்டும். உறங்கும்போது மட்டும் அருகில் வைத்துக் கொள்ளலாம்.

ஐயப்ப கடவுளை மணிகண்டன் என்று அழைப்பார்கள். மணிகண்டன் புலிப்பால் கொண்டு வரச் சென்றபோது தேங்காய் எடுத்துச் சென்றதாக நம்பப்படுகிறது.

மூன்று கண்களை உடைய தேங்காய் முக்கண்ணனான சிவனைக் குறிக்கும்.

காட்டு வழியில் வனவிலங்கினால் ஏற்படும் தீமைகளிலிருந்து இந்த நெய் நிரம்பிய தேங்காய் பக்தர்களைக் காப்பாற்றுவதாக நம்பப்படுகின்றது.

Sharing is caring!