இரண்டாவது தடவையும் மாரடைப்பு வராமல் இருக்க!

எலுமிச்சையும் தேனும் பொதுவாக சமையல் அறையில் எப்போதும் காணப்படும் பொருட்கள்.
இந்த இயற்கைப் பொருட்கள் பலவகைகளில் பயன்படுவதுடன் இரத்தத்தில் கொழுப்பையும் கூட குறைத்து, இதயக் குழாய்களை சுத்தப்படுத்தி இரத்த ஓட்டத்தை சீராக்கும்.எனவே உங்கள் இதயத்தை சீராக வைத்துக்கொள்வது எப்படி என அறிந்துகொள்ள விரும்பினால் மேலே படியுங்கள்.

இந்த அற்புதமான உட்பொருகள் – எலுமிச்சை மற்றும் தேன் – இதயத்தை சீராக்க எவ்வாறு உதவும் என்ற கேள்விக்கான விடையைத் தரும்.

உங்களுக்கு நாங்கள் முதலில் எலுமிச்சை தேன் கலவையை செய்வது எப்படி என்று விளக்கப் போகிறோம்.

செய்முறை 1:

ஒரு கப் பூண்டுச் சாறு
ஒரு கப் புதிய எலுமிச்சைச் சாறு
ஒரு கப் ஆப்பிள் சீடர் வினிகர்
ஒரு கப் இஞ்சிச் சாறு
மூன்று கப் தேன்

செய்முறை 1:

தேனைத் தவிர மேலே கூறப்பட்ட பிற அனைத்துப் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் இட்டு அரைமணி நேரத்திற்கு நன்கு கொதிக்க விடுங்கள்.

பின்னர் இந்த கலவை ஆறியவுடன் அதில் மூன்று கப் தேனை கலக்கவும். இதை அனைத்து உட்பொருட்களும் நன்கு கலக்கும்படி கிளறவும்.

இந்த கலவையை ஒரு கண்ணாடி ஜாரில் எடுத்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். தினமும் காலை சிற்றுண்டிக்கு முன் இதை தினமும் ஒரு ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும்.

செய்முறை 2:

ஆறு எலுமிச்சம் பழங்கள்
முப்பது பூண்டுப் பற்கள்
தேன்

தயாரிக்கும் முறை:

எலுமிச்சை மற்றும் பூண்டை தோலுரித்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
இவற்றை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து நன்கு அடித்துக் கலக்கவும்.
இதில் இரண்டு லிட்டர் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும்.

தயாரிக்கும் முறை:

பின்னர் தணலைக் குறைத்து ஐந்து நிமிடம் வேக வைத்து அதில் சுவைக்கு தேனை சேர்க்கவும்.
இதை ஒரு கண்ணாடி ஜாரில் எடுத்து பிரிட்ஜில் வைக்கவும்.

இதை தினமும் 50மிலி அளவு மூன்று வாரங்களுக்கு குடித்துவரவும். ஒரு வாரம் இடைவெளி விட்டு மீண்டும் மூன்று வாரங்களுக்கு குடிக்கவும்.

Sharing is caring!