இரத்த அழுத்த பிரச்சனை இருக்குதா?

க்ரோமோதெரபி என்பது வண்ண ஒளி சிகிச்சை என்றும் அழைக்கப்படுகிறது. அது என்ன வண்ண ஒளி சிகிச்சை என்று கேட்கிறீர்களா? வண்ணங்களை உபயோகப்படுத்தி, உடலின் அதிர்வுகளை சரிசெய்யவும், உடலின் ஆற்றலை சமநிலைப்படுத்தவும், உடல், உணர்ச்சி, மன மற்றும் ஆன்மீக முறைகளில் குணப்படுத்தவும் உதவுகிறது. இது ஆசியா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நடைமுறையில் இருந்த ஒரு பண்டைய கால சிகிச்சை முறையாகும்.

இந்த சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு நிறமும், தனக்கென ஒரு தனி அதிர்வலைகளை கொண்டு, உடலில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை சரிசெய்கிறது. அந்த வண்ணங்கள் பற்றி பார்ப்போமா!

சிவப்பு
இந்த நிறம் இரத்த அழுத்தத்தை உயர்த்த பயன்படுவதாகவும், மேலும், இரத்த ஓட்டம் மற்றும் நரம்புகளின் இயக்கத்திற்கு உதவுவதாகவும் நம்பப்படுகிறது.

பச்சை
இது உடலுக்கு நல்ல நேர்மறையான சிந்தனைகளை ஏற்படுத்தி நல்லிணக்கத்தையும், மன அமைதியையும் ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது.

பிங்க்
இது இரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கி, நரம்புகள் மற்றும் தமனிகளை பலப்படுத்த உதவுகிறது.

மஞ்சள்
க்ரோமோதெரபியின் பயன்படுத்தப்படும் ஒரு பிரகாசமான நிறம் என்றால் அது மஞ்சள். இந்த நிறம் நரம்பு மண்டலத்தை பலப்படுத்தவும். செரிமானத்திற்கும், சரும சுத்திகரிப்பிற்கும், வளர்சிதை மாற்ற செயல்பாட்டிற்கும் உதவுகிறது.

ஆரஞ்சு
ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி குறைவதற்கு பெரிதும் உதவுகிறது.

ஊதா
தசைகளை நிதானப்படுத்தவும், மேலும் சிறுநீர் கோளாறுகள் மற்றும் மனநோய்களுக்கு சிகிச்சையளிக்கவும் பயன்படுகிறது.

நீலம்
மனநிம்மதியை இது ஊக்கப்படுத்துவதோடு, தலைவலி, வயிற்று வலி, தசைப்பிடிப்பு, கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்னை, சளி, ஒற்றை தலைவலி, மனஅழுத்தம், வாத நோய் போன்றவற்றை சரிசெய்யவும் உதவுகிறது.

இண்டிகோ
இது உடலில் அமைதியை ஏற்படுத்துகிறது. மேலும், கண், காது, மூக்கு சம்பந்தப்பட்ட பிரச்னைகளை குணப்படுத்த பயன்படுகிறது.

க்ரோமோதெரபியின் நன்மைகள்:
வலி மற்றும் வீக்கத்தை குறைக்க..

மஞ்சள் நிறமானது, வலி மற்றும் வீக்கத்தை சரி செய்ய பயன்படுத்தப்படுகிறது. மேலும், வீக்கத்தால் ஏற்படக்கூடிய அழற்சி மற்றும் வலியை குறைக்கவும் உதவுகிறது.

மூட்டுகளின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்த..
க்ரோமோதெரபி, தசைகளை அமைதிப்படுத்தவும் மற்றும் முடக்கு வாதம் தொடர்பான வியாதிகளுடன் தொடர்புடைய மூட்டுகளுக்கிடையே உராய்வை ஏற்படுத்தவும் உதவுகிறது. இதன் விளைவாக, மூட்டுகளில் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தவும், காயத்தைத் தடுக்கவும் பயன்படுகிறது.

தசை வலியை குறைக்க..
இறுக்கமாக தசை இருப்பவர்களுக்கு, இந்த வண்ண ஒளி சிகிச்சை முறையின் மூலம், தசைகளில் உள்ள வலி மற்றும் இறுக்கத்தை நீக்கிடலாம். மேலும், இரத்த குழாய்களில் அழுத்தத்தை குறைத்து, தசைகளுக்கு சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்த வழிவகுக்கிறது. இதனால், தசைகளில் உள்ள வலி மற்றும் இறுக்கம் குறைகிறது.

மனநிலையை ஒழுங்குப்படுத்த..
க்ரோமோதெரபி, நிம்மதி உறக்கத்திற்கும், சீரான மனநிலையை பெறவும் உதவுகிறது. ஆய்வுகளின் அடிப்படையில், பிங்க் நிறம், மனதில் அமைதியை ஏற்படுத்துவதோடு, பதற்றம், மனஅழுத்தம் மற்றும் கோபத்தை குறைக்கிறது என்பது தெரியவந்துள்ளது.

பருவநிலை மாற்ற கோளாறுகளை நீக்க..
பருவநிலை பாதிப்பு கோளாறுகள் (Seasonal Affective Disorders(SAD)) என்பது மனசோர்வினால் ஒவ்வொரு பருவநிலை மாற்றத்தின் போதும் ஏற்படக்கூடிய பிரச்னையாகும். குறிப்பாக இது குளிர்காலத்தில் தான் தொடங்கும். க்ரோமோதெரபி, அதற்கான காரணத்தை கண்டறிந்து பருவநிலை மாற்ற கோளாறுகளை நீக்கி, அதன் அறிகுறிகள் ஏற்படுவதையும் தடுத்திடுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த..
ஆய்வுகளின் படி, க்ரோமோதெரபியில் சருமத்தில் வயதாவதற்கான காரணிகளை எதிர்க்கும் பண்பு உள்ளது. இது சருமத்தை சுத்தப்படுத்தி புத்துயிர் பெறச்செய்வதன் மூலமும், சுருக்கங்களை நீக்குவதன் மூலமும், தோல் செல்களை உற்சாகப்படுத்துவதன் மூலமும், செயலற்ற தோல் செல்களை மீண்டும் உயிர்ப்பிப்பதன் மூலமும் செயல்படுகிறது.

எப்படி செயல்படுகிறது?
இந்த சிகிச்சை முறை உடல் மற்றும் மன ரீதியான பிரச்னைகளுக்கான காரணத்தை கண்டறிந்துவிடுகிறது. அதன் பின், சிகிச்சை அளிப்பவர், உங்களது விருப்பமான நிறத்தை கேட்டறிந்து, அதன் அடிப்படையில் சிகிச்சையை தொடங்குவார். மேலும், நிறங்களின் முக்கியத்துவம் குறித்து உங்களுக்கு புரிய வைத்து, அவை எப்படி உங்கள் உடலில் ஆரோக்கியத்தை பெற உதவுகறிது என்பதையும் புரிய வைப்பார்.

க்ரோமோதெரபி, பாதுகாப்பான மற்றும் பயனுள்ள சிகிச்சை முறையாகும். அன்றாட வாழுவில், நிறங்களின் தேவைகள் மற்றுத் முக்கியத்துவம் குறித்து புரிந்து கொள்ள வைக்கிறது. இயற்கையான முறையில் உடலை குணப்படுத்தி, சிறந்த வாழ்விற்கு இது வழிவகுக்கிறது.

Sharing is caring!