இரத்த சோகையை போக்கும் மாங்காய் பானம்

வெயில் காலங்களில் நமது உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்வது மிக அவசியம். அந்த வகையில், நமது உடலுக்கு தேவையான சத்துக்களை கொண்ட, கோடை காலத்தில் மட்டும் கிடைக்க கூடிய, மாங்காயை வைத்து செய்யக்கூடிய, ‘ஆம் பன்னா’ என கூறப்படும்  வட இந்திய பானம் பற்றித்தான் பார்க்க போகிறோம்.. மாங்காயில் உயிர்ச்சத்து ஏ மற்றும் உயிர்ச்சத்து சி நிறைந்துள்ளது. மேலும்,பொட்டசியம் அதிகளவில் காணப்படும் உணவு வகைகளில், மாங்காயும் ஒன்று. இந்த பானத்தை அருந்துவதால் கிடைக்கும் நன்மை பற்றி பார்க்கலாம்.

இரத்தத்தை சுத்திகரிக்கிறது:

மாங்காயில் அதிகமான அளவு உயிர்ச்சத்து சி இருப்பதால், ரத்தம் சம்மந்தமான பிரச்னைகளிலிருந்து பாதுகாக்கிறது. இந்த பானத்தை அருந்துவதால், ரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்படுவதுடன், புதிய ரத்த சிவப்பு அணுக்களும் பாதுகாக்கப்படுகிறது. மேலும், இது ரத்த சோகை, காசநோய் போன்ற பிரச்னைகளுக்கு நல்ல தீர்வாக அமைகிறதாம்.

இரைப்பைக்கு சுகம் அளிக்கும் மாங்காய் பானம்:


மாங்காயில் பெக்டின் எனப்படும் மருத்துவ குணம் அதிகமாக இருப்பதால், வயிற்றுப்போக்கு, மூலநோய், மலச்சிக்கல், போன்ற இரைப்பை சம்மந்தமான பிரச்னைகளுக்கு நல்ல தீர்வாக இருப்பதுடன். செரிமான சக்தியையும் அதிகரிக்கிறது. இந்த பானம் கர்ப்பினிகளுக்கு சிறந்த  பானமாக கருதப்படுகிறது.

கல்லீரல் பிரச்னைக்கு சிறந்த தீர்வு:


பச்சை மாங்காய், கல்லீரல் தொடர்பான அனைத்து பிரச்னைக்கும் தீர்வாக அமைகிறது. மேலும் உடலுக்கு, தேவையான அமிநோ அமிலங்கள் சுரப்பதை அதிகரிப்பதுடன், குடல் பகுதியில் உள்ள கெட்ட பாக்டீரிக்களையும் வெளியேற்றுகிறது.  பச்சை மாங்காயில் உயிர்ச்சத்து சி மற்றும் ஆக்ஸிஜனேற்றம் அதிகளவில் இருப்பதால் புற்று நோய், இதயம் தொடர்பான நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.

‘ஆம் பன்னா’ தயாரிக்கும் முறை:

பச்சை மாங்காயை நன்றாக நீரில் சுத்தம் செய்து, அதன் தோலுடன் தண்ணீரில் வேக வைக்க வேண்டும். நன்றாக மாங்காய் வெந்தவுடன் குளிர வைத்து, அதில் உள்ள சதைப்பகுதியை ஒரு பாத்திரத்தில் சுரண்டி வைத்துக்கொண்டு, தேவையான அளவு சர்க்கரை அல்லது தேன், சீரகப்பொடி, உப்பு, புதினா இலைகள் மற்றும் தேவையான அளவு நீர் ஊற்றி குளிர்சாதனப்பெட்டியில் வைத்து அருந்தலாம்.

மாங்காயை அப்படியே சாப்பிட பிடிக்காத குழந்தைகளும், மிகவும் விரும்பி சாப்பிடும் பானமாக இருக்கும். இதில் உள்ள புதினா மற்றும் சீரகப்பொடி உணவை செரிமானம் செய்ய உதவும்.

Sharing is caring!