இரவு உணவின் போது செய்ய வேண்டிய சில முக்கிய விடயங்கள்!

ஒட்டுமொத்த ஆற்றலுக்கும் ஆதாரமாய் அமைவது காலை உணவுதான். அதற்காக மற்ற உணவு முக்கியமில்லை என்று அர்த்தமல்ல.

காலை உணவை போலவே மதிய உணவும், இரவு உணவும் மிகவும் அவசியமானவைதான்.

நீங்கள் இரவில் உண்ணும் சில உணவுகள்தான் உங்கள் எடை அதிகரிப்பிற்கும் வேறு சில ஆரோக்கிய பிரச்சினைகளுக்கும் காரணமாகிறது.

எனவே இரவு உணவு சாப்பிடும்போது எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.

சூடான நீர்

அதிக நீர் குடிப்பது ஆரோக்கியமான பழக்கம்தான். ஆனால் இரவு நேரத்தில் குடிப்பது சரியானதல்ல.

இரவு உணவிற்கு பிறகு அதிக தண்ணீர் குடிப்பது நல்ல பழக்கம் அல்ல. சாப்பிட்ட சிலமணி நேரத்திற்கு பிறகு சூடான நீரை குடிக்கவும்.

இது செரிமானத்தை அதிகரிக்கவும் உடலில் உள்ள வாயுவை வெளியேற்றவும் உதவும்.

சர்க்கரை உணவுகளை தவிர்க்கவும்

சர்க்கரை நிறைந்த உணவுகளான கேக், பிஸ்கட் மற்றும் பிற உணவுகளை இரவு நேரத்தில் சாப்பிடும்போது அது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும்.

இதனால் உங்கள் ஆற்றல் மட்டங்கள் அதிகரித்து உங்கள் தூக்கத்தை கெடுக்கும். ஒருவேளை உங்களுக்கு இனிப்பு சுவை தேவைப்பட்டால் சர்க்கரைக்கு பதிலாக தேனை எடுத்துக்கொள்வது ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதுடன் எடை குறைப்பிற்கும் உதவும்.

அதிக உப்பு வேண்டாம்

அதிக உப்பு உடலுக்கு தேவைப்படும் நீரின் அளவை அதிகரிக்கிறது. உணவில் உப்பின் அளவை குறைத்துக்கொள்வது மாரடைப்பு ஏற்படும் அளவை குறைக்கிறது.

மேலும் இரத்த அழுத்தத்தை குறைப்பது, இதய நோய்களை தடுப்பது மற்றும் மரணம் முன்கூட்டியே ஏற்படுவதை தடுப்பது போன்ற நன்மைகளையும் செய்கிறது.

குறைவாக சாப்பிடுங்கள்

ஆயுர்வேதத்தின் படி இரவு உணவை குறைவாக சாப்பிடுவது உங்களுக்கு நிம்மதியான தூக்கத்தை வழங்கக்கூடும். இரவு நேரத்தில் அதிகம் சாப்பிடுவது தூக்கத்தை கெடுப்பதுடன் செரிமானம் அடையும் நேரத்தையும் அதிகரிக்கிறது.

Sharing is caring!