இரவு நேரங்களில் சாப்பிடவேக்கூடாத உணவுகள்

உணவே மருந்து என்று வாழ்ந்திருந்த நமது வாழ்க்கையில் மேற்கத்திய உணவுப் பழக்கம் என்று அறிமுகமானதோ அன்றிலிருந்து அஜீரணக் கோளாறுகள், மலச்சிக்கல் என்று மருத்துவமனை நோக்கி நம்மை அலைய வைத்திருக்கிறது.

நமது உடலுக்கு ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவு கலோரிதான் தேவைப்படுகிறது. அதே மாதிரிதான் பிற சத்துகளும் அதை விட அதிகமாக உடலுக்கு நாம் கொடுக்கும் பொழுது நமது உடல் செய்வதறியாது திகைக்கிறது. ஒன்று கழிவாக வெளியேற்றி விடுகிறது. அல்லது குப்பையாக உடலில் சேமித்து வைத்து விடுகிறது. இந்தக் குப்பையால் தான் வாயுத் தொல்லை உள்ளிட்ட வயிறுச் சார்ந்த பிரச்சினைகள் அதிகமாக ஏற்படுகின்றன.

காலையில் வயிறு நிறைய சாப்பிட வேண்டும். மதிய உணவை அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும். இரவு நேர உணவைக் குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இன்றைய காலத்தில் இரவு நேர உணவை மட்டுமே பெரும்பாலோனரால் நிம்மதியாக சாப்பிட முடிகிறது. அதனால் தனக்கு பிடித்தமான உணவுகளை எல்லாம் எடுத்துக் கொள்கிறார்கள்.

இரவு நேர உணவுகளில் கலோரி அதிகமாக உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது செரிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வதால் வாயுத்தொல்லை, அசிட்டிக், மலச்சிக்கல் உள்ளிட்ட எண்ணற்ற பிரச்சினைகளை உண்டு பண்ணுகிறது. எந்தெந்த உணவுகளை இரவு நேரங்களில் தவிர்க்க வேண்டும் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

Sharing is caring!