இராமாயணமும், இராமர் பாலமும்

இந்துமதத்தில் சொல்லப்பட்டுள்ள புராணக்கதைகளும், இதிகாசங்களும்  மனிதன் வாழ்க்கை முறையைச் சீர்தூக்க முன்னோர்களால் சொல்லப்பட்டவை அவ்வளவே என்னும் கருத்துகள்  ஆன்மிகத்துக்கு எதிரானவர்களுக்கு எப்போதும் உண்டு. அதே நேரம்  விஞ்ஞானம் சொல்வதெல்லாம் சர்வ நிச்சயம் என்றும் இவர்கள்  நம்புவது வழக்கம். ஆனால் சமீப காலங்களாக இந்துமதத்தில் ஆன்மிக வழியில்  என்று முன்னோர்கள் வாழ்ந்த அனைத்துமே  விஞ்ஞான ரீதியாக உண்மை என்பது நிரூபிக்கப்பட்டு  உலகையே வியப்பில் ஆழ்த்தி வருகிறது. அவற்றில் ஒன்று இராமர் பாலம்.

இராமயணத்தில் இந்தியாவில் தமிழ்நாட்டில் இராமநாதபுர மாவட்டத்திலுள்ள திருப்புல் லாணி கடற்கரையில் கடலுக்கு அடியில் 50 கிமீ ஆழத்தில்  இலங்கை தலைமன்னார் வரை இராமர் பாலம் அமைக்கப்பட்டது  என்று குறிப்பிடப்பட் டுள்ளது. இதற்கான காரணம் பற்றி அறிய இராமயணக் கதைக்குள் பிரவேசிக்க வேண்டும் என்றாலும் நமக்கு தேவை இராமர் பாலம் பற்றிய பொதுவான தகவல்தான் என்பதால் அதைப் பற்றி மட்டுமே பார்க்கலாம்.

அகழ்வாராய்ச்சிகளின் படி  இராமர் பாலம் கட்டிமுடிக்கப்பட்டு 17 இலட்சம் ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். கிபி 1480 ஆம் ஆண்டுகளில் கடலில் ஏற்பட்ட பிரளயத்தால் இவை அழிந்திருக்க வாய்ப்புண்டு என்று கூறுகிறார்கள். இந்துமதக் காலத்தின் படி  திரேதாயுகத்தின்  முடிவில்  இராமாயணம்     நடைபெற்றதாக  சொல்லப்பட்டுள்ளது. ஆக கிபி 1480 ஆண்டுக்கு முன்பு வரை இந்தப் பாலம் இலங்கையையும் இந்தியாவையும்  இணைக்கும் பாலமாக மக்கள்  பயன் படுத்தியிருக்கிறார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.  இலங்கை மன்னனின் ஆணைக்கேற்ப  இராமர் பாலம் வழியாக குதிரைவீரர்கள் இராமேஸ்வரம் இராம நாதஸ்வாமிக்கு பால் அபிஷேகம் செய்ய பால்எடுத்து வந்ததாக கல்வெட்டு களில் பொறிக்கப்பட்டிருக்கின்றன.

தற்போது இராமர் பாலம் கட்டுக்கதை அல்ல.. மனிதர்களால்  உருவாக்கப் பட்டதுதான் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள். 30 கிமீ நீளமும் 3 கிமீ அகலமும் கொண்ட இராமர் பாலம் கட்டுவதற்காக பயன்படுத்தப் பட்ட கற்கள் 7 ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை என்று தெரிவித்திருக் கிறார்கள். வெறும் கற்களை  தூக்கி வீசி கட்டப்படவில்லை. இதனுடைய முனைகள் உறுதியாக மிகச்சரியாக திட்டமிடப்பட்டு  கட்டிமுடிக்கப்பட்டுள்ளது என்றும் பாலமுள்ள பகுதியில்  கடலின் ஆழம் குறைந்து காணப்படுவதாகவும் மிதக்கும் கற்களை பயன்படுத்தியிருப்பதாகவும் கூறி வியக்கிறார்கள்.  நாள டைவில் கடலில் ஏற்பட்ட பிரளயத்தினால் தண்ணீர் உட்புகுந்து தனித்தனி திட்டுகளாக மாறிவிட்டதாக கூறுகிறார்கள்.

இராமர் பாலம் என்பது மனிதர்களால் கட்டப்பட்டதும் அவர்கள் கூறும்  காலமானது இராமயணம் நடந்த காலத்தோடு ஒத்து போகிறது  என்பதும் ஆன்மிகப் பற்று கொண்டவர்களை நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது… விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

Sharing is caring!