இறங்தவர்கள் மறுபிறவி எடுப்பது எப்போது?

முன்னோர்கள் இப்போது மீண்டும் வேறு எங்காவது பிறந்திருந்தால் அவர்களுக்கு சாந்தி செய்ததில் தவறு இருக்கிறதா?

நேரம் என்பது அனைவருக்கும் ஒரே மாதிரி கிடையாது, உயிர் உடலுடன் ஒட்டியிருக்கும்போது நேரத்தின் அனுபவம் ஒரு மாதிரி இருக்கின்றது.

உடலுடன் இல்லாதபோது நேரத்தின் அனுபவம் இன்னொரு மாதிரி இருக்கின்றது.

நமக்கு 1 வருடமாக இருக்கலாம். ஆனால் அந்த உயிருடைய அனுபவத்தில் அது ஒரு வினாடி மாதிரி இருக்கிறது.

ஏனென்றால் அந்த உயிருக்கு இப்போது உடல் இல்லை. உடல் இருப்பதால்தான் நமக்கு வலியும் தெரிகிறது. ஒவ்வொரு நிமிடம் போவதும் நன்றாகத் தெரிகிறது.

ஆனால் நமக்கு நேரம் புரிந்த மாதிரி உடல் அற்றவர்க்கு அது புரியவில்லை.

அதனால் உடல் இழந்தவுடன் அந்த உயிருக்கு விரைவில் இன்னொரு கருவறைக்குள் நுழைய முடியவில்லை.

ஏதோ சில உயிர்கள் மட்டும்தான், 40 நாளிலேயே இன்னொரு உடலைப் பெற்று விடுவார்கள். ஆனால் அது மிகவும் குறைவு.

எனவே மிகப் பெரும்பாலான உயிர்கள் இன்னொரு உடல் பெற மிகுந்த காலம் பிடிக்கும் என்பதால் அந்த உயிர்களுக்கு நீங்கள் சாந்தி செய்வதே நல்லது.

Sharing is caring!