இறந்தவர்களின் படத்தை மாட்டும் இடம் எது தெரியுமா?

தேவர்கள் ஆறுமாதங்களும், பித்ருக்கள் ஆறுமாதங்களும் நம்மை காக்கிறார்கள் என்று சொல்கிறார்கள் முன்னோர்கள். எவன் ஒருவன் பித்ரு வழிபாடை முறையாக கையாள்கிறானோ அவனுக்கு வாழ்வில் எத்தகைய துன்பங்களும் சஞ்சலங்களும் உண்டாகாது என்கிறது  இந்துமத சாஸ் திரங்கள். ஏனெனில் இறந்தவர்கள் தெய்வமாக இருந்து நம்மை காக்கிறார்கள் என்பது காலங்காலமாக மக்களால் நம்பப்படுகிறது.

குலதெய்வமும், இஷ்ட தெய்வமும் ஒரு சேர அமைந்திருக்கும் பூஜையறையில்  நம்மை பாதுகாக்கும் நம் உடன் பயணிக்கும் தெய்வமாக மாறிய நம் முன்னோர்களின் படங்களையும் மாட்டலாமே. ஏனெனில் அவர்களும் தெய்வமாக இருந்து நம்மை காப்பாற்றுபவர்கள் தானே என்று சிலர் நினைக்கிறார்கள். உண்மைதான் தெய்வமாக இருந்து காக்கும் முன்னோர்கள் மனிதர்களாக இருந்து இறந்தவர்கள். இறைவன் அல்ல என் பதை மனதில் கொள்ள வேண்டும்.

தெய்வத்தோடு தெய்வமாக என்  பெற்றோர்களையும் வைத்து வழிபடுகிறேன் என்று சொல்லும் அநேகம் பேர் நம்மில் உண்டு. ஆனால்   அகிலத் தையும் அண்ட சராசரங்களையும் உருவாக்கியது தெய்வம் தான். உலகில் சக ஜீவராசிகளையும் உருவாக்கி அவர்களுக்கு அபயம் அளிப்பதும் இறைசக்திதான். அதனால் இறந்த மனிதப்பிறவிகள் இறைவனுக்கு நிகராக மாட்டார்கள் என்பதுதான் உண்மை.

கடவுள் தான் நம்மை காப்பவர். அவருக்கு நிகரானவர்கள் அவரைத் தவிர வேறுயாருமில்லை. இறந்தவர்களை பூஜிக்கிறேன் என்று இறைவனை நிந்தித்துவிடக்கூடாது. அப்படியா என்று கடவுளின் படங்களுக்கு மேலும் மாட்டக்கூடாது. இறந்தவர்களின் படங்களை இறைவன் இருக்கும் படத் துக்கு கீழே தரையில் வைத்து வணங்குவது தான் நல்லது. அதே போன்று கடவுள் படங்களோடு பக்கத்தில் ஒட்டி வைத்திருப்பதும் தவறு.

இவ்வளவு சம்பிரதாயங்களையும் நம் முன்னோர்கள் கடைப்பிடித்ததால் தான் பூஜையறையில்  இறந்தவர்களின் படங்களை மாட்டாமல்  வேறு இடங்களில் தென் திசையை நோக்கி இருக்குமாறு மாட்டிவைத்தார்கள்.பித்ரு உலகம்  பூமியிலிருந்து தென் திசையை நோக்கி இருக்கிறது என்ற நம்பிக்கையை  இந்துமதம் கொண்டிருந்தது. அதனால் தான் இறந்தவர்களின் படங்களை தென் திசை நோக்கி மாட்டிவைத்தார்கள். ஆனால் ஆன்மிக பெரியோர்கள்  பூஜையறை தவிர வேறு எந்த இடத்தில் மாட்டினாலும் தவறில்லை என்கிறார்கள்.

Sharing is caring!