இறைவனை அடைய என்ன செய்யவேண்டும்?

உள்ளன்போடு வேண்டும் கோரிக்கைகளை பகவான் நிச்சயமாக நிறைவேற்றி வைப்பார். தூய்மையான அன்பும், உண்மையான பக்தியும், பொறுமையும் கொண்ட பக்தனை எப்போதும் இறைவன் கைவிடுவதே இல்லை.மனிதனுள் உயர்ந்தவன், தாழ்ந்தவன், செல்வந்தன், ஏழை, விலக்கி வைக்கப்பட வேண்டி யவன் என்ற பாகுபாடெல்லாம் இறைவனிடம் இருக்காது. ஏனெனில் இறை வனே அனைவரையும் படைத்தவன் என்பதால்…

இதற்கு உதாரணமாக திருப்பாணாழ்வார் பற்றிய சரித்திரத்தை எடுத்து கொள் ளலாம்.  தாழ்ந்த குலத்தில் தோன்றியவர் திருப்பாணாழ்வார். இவர் அரங்கன் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார். தாழ்ந்த குலத்தைச் சார்ந்தவர்களை ஆலயத்துக்குள் அனுமதிக்க மாட்டார்கள் என்றாலும் இறைவனை நினைப் பதை அவர் ஒரு போதுன் கைவிடவில்லை. தினமும் காவேரி கரைக்கு வந்து ஆலயதரிசனம் செய்வதை  வழக்கமாக கொண்டிருந்தார்.

ஒருமுறை அப்படி மனதார இறைவனை நினைத்து பூஜித்துக் கொண்டிருக் கும்போது திருமஞ்சனத்துக்கு நீர் எடுக்க வந்த லோக சாரங்க மாமுனிவர் திருப்பாணாழ்வாரைக் கண்டு முகம் சுளித்தப்படி இங்கு என்ன செய்கிறாய் தள்ளி நில் என்றபடி அவரை விரட்டினார். பக்தியில் உருகியிருந்த திருப் பாணாழ்வாருக்கு இவர் கூறியது சற்றும் காதில் விழவில்லை. அதனால் மீண் டும் மீண்டும் அழைத்து பார்த்த மாமுனிவர் ஒரு கட்டத்தில் பாணர் மீது கல்லை வீசி எறிந்தார்.

திடுக்கிட்டு திரும்பிய திருப்பாணாழ்வார் மனம் வருந்தினார்.  தவறான காரியம் செய்துவிட்டோம் போல் இருக்கிறதே. என்ன அபசாரம் செய்து விட் டேன் என்று வருந்தி உடனே ஓடி போய் ஓரமாக நின்றுவிட்டார். மாமுனிவர் வீசிய கல் அடிப்பட்டதில் இரத்தம் வழிந்தது.இடையில் மாமுனி நீராடி முடித்து ஆசாரத்துடன் குடத்தில் திருமஞ்சனத்துக்கு தீர்த்தம் எடுத்து கோயி லுக்குள் சென்றார்.

உண்மையான பக்தனான திருப்பாணாழ்வார் மீது பட்ட கல்லினால் இரத்தம் வடிந்ததது போன்ற வலி அரங்கனுக்கு உண்டானதால் அவர் வருத்தம்கொண்டிருந்தார். அருகில் இருந்த நாச்சியார் பாணரை கோயி லுக்குள் வரவழைக்கவேண்டும் என்று வேண்டினாள்.

அன்றிரவு மாமுனியின் கனவில் தோன்றிய பெருமாள், என் பக்தன் தாழ்ந்த குலத்தில் பிறந்தவன் என்று வேறுபாடு பார்க்காமல் உன் தோளில் ஏற்றி என்னிடம் வா என்று கட்டளையிட்டார்.

Sharing is caring!