இறை வழிபாட்டில் சங்குக்கு முக்கியத்துவம் ஏன்?

இறைவன் வழிபாட்டில், சங்குக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சங்குகளால் செய்யப்படும் அபிஷேகம் சிறப்பு மிக்கது. இதை தரிசிப்பது பெரும் பலனை அளிக்கும்.

ஹிந்துக்களின் கலாசாரத்தில் சங்கு ஊதுதல் மிகவும் முக்கியமானது. சங்கு ஊதினால் அபசகுனம் என்பது இப்போது சினிமாக்களால் ஏற்பட்ட அவதுாறு.  ஆனால்,சங்கில் உள்ள மருத்துவ குணங்களை அறிந்த முன்னோர், அதை இறை வழிபாட்டில் சேர்த்துள்ளனர்.

நுண் கிருமிகளை அளிக்கும் தன்மை கொண்டது சங்கு.  இதனை அறிந்த நம் முன்னோர், வீட்டு வாசலில் சங்கை, பாதி பூமிக்கு அடியிலும் மீதி மேலே தெரியும் படியும் பதித்தனர். இதனால் வெளியில் இருந்து வரும் காற்று, சங்கின் ஊது துவாரம் வழியாக உள்ளே செல்லும், காற்றில் கலந்துள்ள மாசுகளை சங்கு அழித்து, நல்ல காற்றை, வீட்டுக்குள்ளே தருகிறது.

இதனால் தான் இன்று வரை, சங்கை, வீட்டு வாசலில் கட்டி தொங்க விடுகின்றனர். பழங்காலங்களில் அரண்மனைகளில் அரச விழாக்கள் ஆரம்பிக்கும் முன்பும், போருக்கு தயாராகும் போது சங்கினை ஒலிக்க வைப்பார்கள். ஏனெனில், சங்கு ஒலியில் தீய சக்திகள் நீங்கி நல்ல சக்திகள் உருவாகிறது.

வெண்மை நிற பால் சங்கை உரைத்து சாப்பிட்டால், உடலில் உள்ள கிருமிகள் அழிக்கபடுவதோடு பல விதமான நோய்களும் குணமாகும். ஆலயங்களில் பிரதான சங்காக வலம்புரிச் சங்கு இடம் பெறும். சங்கின் அமைப்பு, அந்தப் பிரணவத்தை உணர்த்துகிறது. வலம்புரி கணபதியின் தும்பிக்கையைப் போல் தோற்றம் அமைந்திருக்கும்.

பாற்கடலைக் கடைந்த போது வந்த பல மங்கலப் பொருட்களில் இந்தச் சங்கும் ஒன்று.இந்தச் சங்கு உதயம் ஆனதும், மஹாவிஷ்ணு, அதைத் தன் கரத்தில் வைத்துக்கொண்டு சங்கு சக்ரதாரி ஆனார். சங்கு ஐஸ்வர்யம், வீரம், மங்கலம் இவற்றைப் பிரதிபலிக்கும் பொருளாக அமைகிறது.

Sharing is caring!