இல்லற வாழ்வில் ஈடுபாட்டை உண்டாக்கும் முருங்கைப்பூ…

இரும்புச்சத்துக்குறைபாட்டை நீக்குவதில் முருங்கையின் பங்கு அளப்பரியது என்பது தெரியும். முருங்கையின் இலை, வேர், பூ, பட்டை, காய் அனைத்துமே மருத்துவ குணங்களைக் கொண்டது. 30 வருடங்களுக்கு முன்பு எல்லோர் வீட்டிலும் முருங்கை மரம் இருக்கும். அதனால் வாரம் இருமுறையாவது முருங்கைப் பூ, முருங்கை இலை, முருங்கைக்காய் என்று சமையலில் தவறாது இடம்பெற்று விடும்.

வேண்டிய அளவு கீரையை எங்கிருந்து வேண்டுமானாலும் பறித்து வந்து சமைத்து விடுவார்கள் அம்மாக்கள். பிரசவக்காலத்தில் கூட பெண்கள் இரத்தசோகை குறைபாட்டை அனுபவித்ததில்லை. இரத்த சோகையைத் தடுக்கும் அளவுக்கு  அவர்களது உணவு முறை இருந்ததே இதற்கு கார ணம்.

முன்னோர்கள் எந்தவிதமான நோய்க்கும் உணவு மூலமே சரிசெய்ய பார்ப்பார்கள். உணவையே மருந்தாக்கி கொடுத்து நோய்க்கு தீர்வு காண்பார் கள். இயற்கை கொடுக்கும் உணவு பொருள்களைth  தவிர்க்காமல் பயன்படுத்தியதால் தான் ஆரோக்யம் குறையாமல் செஞ்சுரி கடந்த வாழ்க்கை  யை வாழ்ந்தார்கள். இப்போது உடலின் சீரான இயக்கத்துக்கு முக்கிய காரணமான இரத்தமே போதிய அளவில் இல்லை என்பது தான் முக்கிய பிரச்னையாக இருக்கிறது.

இப்போதும் முருங்கை இலையை மட்டுமே பொரியலாக்கி சாப்பிடுகிறோம். முருங்கைப்பூவை தனியாக சமைப்பது கிடையாது. முருங்கைப்பூ வின் மகத்துவம் பற்றி அறிந்தால் இனி  முருங்கைப்பூ சமையலை விரும்பி செய்வீர்கள்.

முருங்கைப்பூ பயன்கள்:
கண்களுக்கு வேலை கொடுக்கும் பணியில் தான் இன்று அநேகம் பேர் இருக்கிறோம். இதனால் கண்களில்  உஷ்ணமும் அதிகமாகிறது. உடல் உஷ்ணத்தைப் போக்கவும், கண்களின் சூட்டை தணிக்கவும் நல்லெண்ணையை உடலில் மசாஜ் செய்து கண்களுக்கு கட்டுவது வழக்கம். ஆனால் இன்று நல்லெண்ணெய் குளியல் என்பது மறந்துவிட்ட ஒன்றாகிவிட்டது.

கண்களுக்கு குளிர்ச்சியை உண்டாக்கக்கூடிய சிறந்த மருத்துவகுணத்தைக் கொண்டிருக்கிறது முருங்கைப்பூ.நீரை கொதிக்க வைத்து  சுத்தம் செய்த முருங்கைப்பூவை சேர்த்து கஷாயமாக்கி குடித்தால் கண்கள் குளிர்ச்சி அடையும்.

Sharing is caring!