இல்லற வாழ்வில் மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது…..

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பொது மக்களுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளனர்.

குறித்த இரு மாகாணங்களிலும், போலி நாணயத்தாள்களின் புழக்கமானது கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ளதால், இது தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.ஐயாயிரம் ரூபா போலி நாணயத்தாள்களின் புழக்கமே அதிகமாக உள்ளதாகவும், எரிபொருள் நிரப்பு நிலையங்கள், வர்த்தக நிறுவனங்கள், மற்றும் சந்தைகள் போன்ற இடங்களில், போலி நாணயத்தாள்கள் தொடர்பில் விழிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.இது தொடர்பில் சந்தேகத்திற்கிடமான முறையில் யாரேனும் செயற்படுவார்களாக இருந்தால், உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!