இல்லாதவர்களுக்கு உதவுவோம். இதுவும் இறை வழிபாடே.

நமது வழிபாடுகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். அவையாவன குரு வழிபாடு , லிங்க வழிபாடு , சங்கம வழிபாடு. குரு வழிபாட்டு முறையில் ஒருவரைக் குருவாக ஏற்று அவரின் வழிகாட்டலில் இறைவனை அடைதல் , லிங்க வழிபாடு என்பது இறைவனை நேரடியா வழிபட்டு முக்தி அடைதல் அதாவது அவனருளாலே அவன் தாள் வணங்கி அவனை அடைதல் , மற்றது சங்கம வழிபாடு அதாவது அடியார்களை வணங்கி அவர்களை இறைவனாகப் பாவித்து வணங்கி அதனூடு சிவனை அடைதல். இதில் எதாவது ஒன்றையோ அல்லது எல்லாவற்றையுமோ நாங்கள் செய்யலாம்.

சங்கம வழிபாடு சிறந்ததது என திருமூலர் திருமந்திரத்தில் பின்வருமாறு பாடியுள்ளார்.

படமாடும் கோயில் பகவற்கு ஒன்று ஈயின்
நடமாடும் கோயில் நம்பர்க்கு ஆங்கு ஆகா
நடமாடும் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடும் கோயில் பகவற்கு அது ஆகுமே

தலையிலே நாகம் படமாடும் கோவிலில் பகவானுக்கு கொடுத்தால் அது நடமாடும் உயிரினங்களுக்கு போகாது ( அதற்காக அது பிழையென்று அவர் சொல்லவில்லை) ஆனால் நடமாடும் கோயிலான அடியவர்களுக்கோ அல்லது உயிரினங்களுக்கோ ( பொதுவாக பசு போன்ற வாயில்லா சீவன்களுக்கு) கொடுத்தால் அது படமாடும் ஈசனுக்கு போய் சேரும் என்பதே பொருள்.

தானங்களில் சிறந்தது அன்னதானம். மாதத்தில் ஒருமுறையாவது அடியவர்களுக்கு அல்லது ஏழைகளுக்கு அன்னதானம் செய்வோம். நயினை நாகபூசணி அம்மன் கோவிலில் செல்லும் அடியார்களுக்கு தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. வேறும் சிலகோவில்களிலும் இது நடைபெறுகிறது. இதே போல் மற்றைய நிறுவங்கள் கோவில்களும் செய்தால் சிறப்பு. இது ஒரு தயவான கருத்து.

Sharing is caring!