இளநீரில் எரியும் விளக்கு, முகம் வியர்க்கும் முருகன் சிலை… கோவில் அதிசயங்கள்!

திருநெல்வேலி பாளையங்கோட்டைஅருகே, திருச்செந்தூா் சாலையில் உள்ள சிரட்டை பிள்ளையாா் கோவிலில் விநாயகருக்கு விடலை போடும் போது சிரட்டையும், தேங்காயும் பிரிந்து சிதறுகிறது.

தஞ்சைபிரகதீஸ்வரர் கோவிலில், 72 டன் எடையுடைய கல், கோபுர உச்சியில் வைக்கப்பட்டுள்ளது. கருவறை குளிர்காலத்தில் வெப்பமாகவும், வெயில் காலத்தில் குளிராகவும் இருக்கிறது

தாராசுரம் (கும்பகோணம்) ஐராவதீஸ்வரர் கோவிலில் உள்ள இசைப்படிகளில் தட்டினால் சரிகமபதநிச என்ற இசை வருகிறது.

கடலுக்கு, 3500 அடி உயரத்தில் உள்ள, வெள்ளியங்கிரி மலையில் சிவனின் பஞ்சவாத்ய ஒலி கேட்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே கோட்டையூரில் நூற்றி ஒன்று சாமிமலை குகையில், ஓரடி உயரம் கொண்ட கல்லால் ஆன அகல் விளக்கில் இளநீர் விட்டு தீபமேற்றினால், பிரகாசமாக எரியும் அதிசயம் நடக்கிறது.

 சென்னை வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயிலில் தினமும் சூரிய ஒளி, மூலவா் மீது விழுகிறது.

 சுசிந்திரம் சிவன் கோவிலில், ஒரு சிற்பத்தின் காதில் குச்சியை நுழைத்தால், மறு காதுவழியாக வருகிறது.

Sharing is caring!