இளநீரை தினமும் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?

இளநீர் இயற்கை தந்த வரப்பிரசாதம் என்று கூறலாம். இதில் பல்வேறு சக்தி வாய்ந்த ஊட்டச்சத்துக்கள் ஏராளமான அளவில் நிரம்பியுள்ளது.

இது ஒருவரது தாகத்தைத் தணிப்பதோடு, ஒருவருக்கு நீண்ட நேரம் பசி எடுக்காமல், பசியைக் கட்டுப்படுத்தும்.

இளநீரை கோடைக்காலத்தில் குடிப்பது மிகவும் நல்லது. இதனால் உடல் வறட்சி அடைவது தடுக்கப்படுவதோடு, உடலில் நீர்ச்சத்தின் அளவும் சீரான அளவில் பராமரிக்கப்படும்.

பொதுவாக இளநீரை 5 முறையில் குடிக்கலாம். இவை ஒவ்வொரு கால நேரத்திலும் வெவ்வேறு விதமான பலனை நமது உடலுக்கு தரும்.

முதலாவதாக காலை நேரத்தில் இளநீரை குடித்தால் உடனடி பலனை அடைய முடியும்.

குறிப்பாக வெறும் வயிற்றில் இளநீர் குடிப்பதால் உடல் மெட்டபாலிசம் வேகமாக நடைபெறும். இதனால் நாள் முழுக்க சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.

சாப்பாட்டிற்கு முன், பின்

சாப்பிடுவதற்கு முன்னர் இளநீர் சாப்பிட்டால் மிக சுலபமாக செரிமான கோளாறுகளை தடுத்து விடும். அத்துடன், வாயு தொல்லை, வயிற்று உப்பசம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தாமல் பார்த்து கொள்ளும். இதே போன்று சாப்பிட்ட சில மணி நேரத்திற்கு பின்னரும் குடிக்கலாம்.

தூங்குவதற்கு முன்

தூங்குவதற்கு முன்னர் இளநீர் குடித்தால் அருமையான மாற்றங்கள் உடலில் உண்டாகும். முக்கியமாக மன அழுத்தம் குறையும். இதய துடிப்பு சீராக இருக்கும்.

இதனால் நிம்மதியான தூக்கம் உங்களுக்கு உண்டாகும். கூடவே மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை தீர்க்க இரவில் இளநீர் குடிப்பது சிறந்த வழியாகும்.

சிறுநீர் கற்கள்

மற்ற நேரங்களை விட தூங்குவதற்கு முன்னர் இளநீர் குடித்து வந்தால் உடலில் உள்ள அழுக்குகளை வெளியேற்றி விடலாம். அத்துடன் சிறுநீர் பாதையில் உண்டாக கூடிய அடைப்புகள், நோய் தொற்றுகள், சிறுநீரக பிரச்சினை முதலிய பாதிப்புகளை இந்த அமிர்த நீர் தடுக்கும்.

Sharing is caring!