இளமைக்கு பீர் குடிப்பதா?…

பாட்டிலிலேயே ‘மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு’ என்று பெரிய பெரிய எழுத்துக்களில் போட்டிருந்தாலும் கூட, ஏன் சினிமா தியேட்டர்களில் இந்த வாசகங்கள் காட்டப்பட்டாலும் கூட  நமது ’குடி’மக்கள்  அதை ஒரு  விஷயமாக எடுத்துக் கொள்வதே இல்லை. அளவிற்கு மிஞ்சினால் அமிர்தம் கூட விஷமாக மாறும், எதையும் அளவோடு அருந்தினால் நிச்சயம் அவை உடலுக்கு நன்மையை கொடுக்கும். அந்த வகையில், பீர் குடிப்பது உடலுக்கு என்னென்ன நன்மைகளை தருகிறது என்று தெரிந்துக்கொள்ளலாம்.

*  பீர் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பை தருகிறது.மேலும் இது இரத்த ஓட்டம் சீராக வைக்க உதவுகிறது.

*  ஒரு நாளைக்கு சுமார் ஒரு பாட்டில் பீர் அருந்துபவர்களுக்கு 20 – 50% இருதய நோய் வரும் சந்தர்ப்பம் குறைவு என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

*  பீர் மூளையை இளமையாக வைக்க உதவுகிறது

*  தூக்கம் இன்றி தவிப்பவர்களுக்கு பீரில் உள்ள நிக்கோடினிக் அமிலங்கள் தூக்கம் ஊக்கியாக (Sedatives) செயல்பட்டு நல்ல உறக்கம் கிடைக்கும்.

*  பீர் குடிப்பது மனஇறுக்கத்தை தளர்த்தி மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.

*  இதில் உள்ள மக்னீசியம், செலினியம், பொட்டாசியம் கல்லீரலில் உண்டாகும்  கற்கள் உண்டாவதை தடுக்கிறதாம்.

Sharing is caring!