இவர்கள் சேமிப்பில் ஆர்வமும் உழைப்பில் ஈடுபாடும் கொண்டவர்கள்..!

இரண்டு நட்சத்திரங்களை அடக்கிய உத்திராடம் நட்சத்திரம்  சூரியனுக்கு உகந்த நட்சத்திரத்தில் மூன்றாவது நட்சத்திரமாக சிறப்பு பெற்று விளங்குகிறது.  ஜோதிடம் இந்நட்சத்திரத்தை முக்கால் நட்சத்திரம் என்று சொல்கிறது. இந்நட்சத்திரத்தின் முதல் பாதத்தைக் கொண்டவர்கள் தனுசு ராசியையும், மற்ற மூன்று பாதங்கள்  மகர ராசியையும் கொண்டிருக்கின்றன. 27 நட்சத்திரங்களின் வரிசையில் 21 வது இடத்தைப் பெற்றிருக்கிறது இந்நட்சத்திரம்.

உத்திராடம் நட்சத்திரத்தின் முதல் பாதத்தைக் கொண்டவர்களான நீங்கள் குருவை அதிபதியாக கொண்டிருப்பீர்கள்.  கல்விகளில் விருப்பமுற்று இருப்பீர் கள். புராணம், இலக்கியங்கள், சாஸ்திரங்களிலும் ஈடுபாடு உடையவர் களாக இருப்பீர்கள். உயர்ந்த அணிகலன் மீது  இயல்பாகவே மோகம் கொண்டிருப்பீர்கள். குடும்பத்துக்குள் அந்நியோன்யமாக விளங்குவீர்கள். மணம் போல் இல்வாழ்க்கை அமையும். வீடு, மனை யோகம் வாய்க்கும் பேறு பெற்றவர்கள்.

உத்திராடம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தைக் கொண்டவர்களான நீங்கள் சனியை அம்சமாக கொண்டிருப்பீர்கள். பணமோ பொருளோ எல்லாமே விரை யமாக்க கூடிய குணத்தை இயல்பிலேயே கொண்டிருப்பீர்கள்.  பிறரை அடக்கி  தலைமை தாங்கி வாழவே விரும்புவீர்கள். குடும்பத்தின் மீது அதிக பற்றும் பாசமும் கொண்டவர்களாக விளங்குவீர்கள். வாழ்வில் எப்போதும் பொருளாதார ரீதியான துன்பத்தை அனுபவிக்க மாட்டீர்கள். தோல்வியை தாங்கிகொள்ள மாட்டீர்கள்.

உத்திராடம் நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தைக் கொண்டவர்களான நீங்கள் சனியை அதிபதியாக கொண்டிருப்பீர்கள். பிறரது ஆலோசனைகளை கேட்காமால் சுயமாக முடிவெடுப்பதையே விரும்புவீர்கள். சட்டென்று உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளைக் கொட்டிவிட்டு அதை சமாளிக்கவும் செய்யும் சாமர்த்திய சாலி களாக இருப்பீர்கள். பயணம் செய்வதை விருப்பமாக கொண்டிருப்பீர்கள்.  சகல செளபாக்கியங்களோடு வாழ விரும்புவீர்கள்.

உத்திராடம் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தைக் கொண்டவர்களான நீங்கள் குருவை அம்சமாக கொண்டிருப்பீர்கள். இயல்பாகவே பிறருக்கு உதவும் குணத் தைக் கொண்டிருப்பீர்கள். யாருக்கும் அஞ்சாமல் நேர்மையாக வாழ்வதில் உறுதியாக  விளங்குவீர்கள். பிறர் நலனிலும் அக்கறை செலுத்துவீர்கள். குடும் பத்தினரிடம் பற்று கொண்டிருப்பீர்கள். வாழ்வில் வரும் தடைகள் அனைத்தையும் தைரியத்தோடு சமாளிப்பீர்கள். பணியிடங்களில் உயர்பதவிகள் தேடிவரும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களான நீங்கள் நல்ல அறிவுத்திறமையைக் கொண்டிருப்பீர்கள். சேமிப்பில் ஆர்வமும் உழைப்பில் ஈடுபாடும் கொண்டவர் களாய் விளங்குவீர்கள். அழகிய தோற்றத்துடன் விளங்கும் நீங்கள் உங்கள் குடும்ப அக்கறையிலும் அதிக கவனம் செலுத்துவீர்கள். கலைகளிலும், பொதுநலத்திலும் ஆர்வம் மிக்கவர்களாய் இருப்பீர்கள். அதிக  கோபமும்  அதனால் உருவாகும் வஞ்சமும் தவிர்த்தால் வாழ்வில் ஏற்றங்களை அதிகம் சந்திப்பவர்களாய் இருப்பீர்கள்.

Sharing is caring!