இஷ்டி காலத்தில் செய்ய வேண்டிய பரிகார ஹோமங்கள்

நாம் செய்யும் பூஜைகளையும், ஹோமங்களையும் தெய்வங்கள் அருகில் இருந்து பெற்றுக்கொள்வதாக ஐதிகம். ஆனால் குறிப்பிட்ட நாளில் தேவர்கள் நிச்சயமாக  நம் அருகில் இருக்கும் நேரங்களில் செய்யப்படும் பூஜைகளை   நேரிடையாக பெற்றுக்கொள்கிறார்கள். அதனால் அன்றைய தினம்  ஹோமங் களும், பூஜைகளும் செய்தால் மிகவும் உசிதம் என்று  இந்துமத சாஸ்திரங்கள் சொல்கிறது.

நாள்காட்டியில்  முக்கிய விரத தினங்கள், பெளர்ணமி, அமாவாசை, பிர தோஷம், ஷஷ்டி, சங்கடஹர சதுர்த்தி போன்ற முக்கிய நாட்களோடு இஷ்டி காலம் என்றும் குறிக்கப்பட்டிருக்கும். இஷ்ட தெய்வங்களை வணங்கவும்,  பரி காரம் செய்ய வேண்டிய பூஜை, ஹோமங்களையும் இக்காலத்தில் செய்தால் பலன் நிச்சயம் கிடைக்கும். இந்த நாளில் செய்யப்படும் ஹோமங்கள் சக்தி வாய்ந்தவையாக அமையும் என்று ஜோதிடம் சொல்கிறது.

இஷ்டி என்பது அமாவாசை அல்லது பெளர்ணமி  திதியின் இறுதிப்பகுதியா கும்.  அதாவது பெளர்ணமி திதியின் 4 ஆம் பாகமும், பிரதமை திதியின் முதல் 3 பாகங்களையும் கொண்டிருக்கும் காலம். இக்காலத்தில்  எந்த தேவர்களின் ஆசிர் வாதம் வேண்டி நாம் பூஜை செய்தாலும் அந்த பூஜைக்குரிய தேவர்கள்  பூஜை செய்யும் போது அருகிலேயே வந்து  சூட்சும ரூபமாக பெற்றுக்கொள்வார்கள் என்று நமது ஆன்மிக நூல்கள் கூறுகின்றன.

இஷ்டி என்றால் பூஜை, யாகம் என்று சொல்வார்கள். முருகப் பெருமானுக்கு  பூஜைகளும் யாகங்களும் பிடித்தமானது. குமாரஸ்தவத்தில் முருகப்பெருமானைப் பற்றி சொல்லும்போது ’ஓம் இஷ்டி பதயே நமோ நம’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இக்காலங்களில் நாம் செய்யும் தான தர்மத்துக்கு மிகவும் சக்தி உண்டு. நாம் விரும்பும்  இஷ்ட தெய்வங்களுக்குரிய  பொருள்களை இக்காலத்தில் தானமாக அளித்தால் பன்மடங்கு புண்ணியத்தைப் பெற்று தரும். இனி நீங்கள் செய்யும் ஹோமங்கள், பரிகார பூஜைகள் அனைத்தும் இஷ்டி காலத்தில் செய்யுங்கள்.

Sharing is caring!