ஈழத் திருநாட்டில் வாழும் இந்துக்களை என்றென்றும் காத்தருளும் ஈழத்தின் பஞ்ச ஈஸ்வரங்கள்..!

ஹிந்துமா சமுத்திரத்தில் உள்ள ஈழநாடு,சித்தர் திருமூலரால் “சிவபூமி” என்று
போற்றப்பெற்ற திருநாடு! இந்த நாட்டில் ஐந்து ஈச்சரங்கள் உள்ளன..இலங்கையின் பஞ்சஈச்சரங்கள்எனப்படும்சிவத்தலங்கள்,முன்னேச்சரம்,நகுலேச்சரம்,திருக்கோணேச்சரம், திருக்கேதீச்சரம், தொண்டீச்சரம் ஆகும்.

முதல் பயணம் – முன்னேச்சரம்:

இலங்கையின் வடமேற்குப் பிரதேசத்தில் புத்தளம் மாவட்டத்தில் சிலாபம் என்ற நகரில்இருந்து கிழக்கே, சுமார் இரண்டு கிலோமீற்றர் தூரத்தில் சிலாபம்-குருநாகல் வீதியில் முன்னேசுவரம் எனும் கிராமத்தில் இக்கோவில் அமைந்துள்ளது.ஆலயமூர்த்தியின் பெயர் முன்னைநாதர்என்றும், அம்பாளின் திருநாமம் வடிவழகாம்பிகை என்றும் அழகியதமிழ்ப்பெயராகக் காணப்படுவது இதன்பழமைக்கு எடுத்துக்காட்டு.பிரம்மாவால் உலகம் படைக்கப்பட்டபோதே இவ்வாலயமும் படைக்கப்பட்டது என்றுபுராணம் கூறுகிறது.முன்னேசுவரம் குபேரன்,இராவணன் இராமபிரான் ஆகியோரால்வழிபடப்பட்டதாய் வரலாறு சொல்கிறது.எனவே கி.மு. 4400 ஆண்டுகட்குமுற்பட்டதாகவே இந்தக் கோயில் இருக்கவேண்டும். இராம, இராவண யுத்தத்தோடுமுன்னேஸ்வரம் தொடர்புபட்டுள்ளது. ஆதியில் மாயவனாறு என்றழைக்கப்பட்ட இந்த ஆறு, தற்காலத்தில் அரசினால் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, தெதுறு ஓயா எனவழங்கப்பட்டு வருகின்றது. மகாவிஷ்ணுவேமாயவன் என அழைக்கப்படுகின்றார். ஒரு சந்தர்ப்பத்தில் மகாவிஷ்ணு சிவனிடம், ‘நான் மோகினி ரூபம் எடுத்தபோது என்னைச்சேர்ந்து ஐயனார் உதயமானார். இவ்விடத்தில் நான் ஆறாக ஓடிக்கொண்டிருப்பேன். இங்குவருடா வருடம் வந்து என்னைச் சேரவேண்டும்’என்று கேட்டுக்கொண்டார் என்றுகூறப்படுகின்றது. சிவவிஷ்ணு ஐக்கியத்தின்தத்துவம் வேறாகக் காணப்பட்டபோதிலும்,சாதாரண மக்கள் புரிந்து கொள்ளும் விதத்தில்மேலோட்டமான புராணக் கதையாக மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.அதற்கிணங்கவேமாயவனாற்றில் தீர்த்தம் நடைபெறுவதாகவும் ஒரு ஐதீகம்காணப்படுகின்றது. தீர்த்தக்கரையின் பெயர் ஐயனார் கோவிலடி என அழைக்கப்படுகின்றது.இவ்வாலயச் சூழல் தேவாரத் திருப்பதிகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ‘சீதப்புனல் வயல்சூழ்’என்ற வரிகளுக்கேற்பக் காணப்படுகின்றது. இக்கோயிலைச்சுற்றிப் பல பாரிய குளங்கள்
காணப்படுகின்றன. இக்குளங்களோடு சேர்ந்து கோயிலுக்கு மானியமாக வழங்கப்பட்டவயல்களும் காணப்படுகின்றன.இவ்வாலயத்திற்கு உள்வீதி, மாடவீதி,
ராஜவீதியென மூன்று வீதிகள் உண்டு,முன்னேசுவரம் ஆலயத்திற்கு இராஜகோபுரம்
கிடையாது. 50 அடி உயரமுடைய ஸ்தூபிகாணப்படுகின்றது. இந்த ஸ்தூபி,இந்தியாவிலுள்ள தஞ்சாவூர் பிரகதீஸ்வரன்கோயில் ஸ்தூபியை ஒத்தத்தாகக்
காணப்படுகின்றது. இது அழகிய சுதைவேலைப்பாடுடையதாகவும் விளங்குகின்றது.
முன்னேசுவர ஆலய தல விருட்சமாகவில்வமும், அரசும் போற்றப்படுகின்றன.
வில்வ விருட்சம் கோயிலுக்குள் இருக்கின்றது.அரசு கோயிலுக்கு முன் காணப்படுகின்றது.வில்வ விருட்சத்திற்கு நித்திய பூசைநடைபெறும். தெற்குத் தேர்வீதி அருகில்அருச்சனைப் பழக்கடைகள் நிறைய உள்ளன.பல வகையான பழங்களைத் தட்டில் வைத்து தருகிறார்கள். நம்மூரில் வீட்டுவிஷேடங்களில் வெற்றிலைத் தட்டில் பழங்கள் தேங்காய் வைப்பது போல் தட்டில் பெரியபெரிய வெற்றிலைகள் வைத்து (பாக்கு கிடையாது) நடுவில் எல்லாப்பழங்களையும் பாதியாகவோ அல்லது முழுதாகவோ நம் கொடுக்கும் பணத்திற்கு ஏற்ப வைத்துக்
கொடுக்கிறார்கள்.

திருக்கேதீச்சரம் பயணம்:

முன்னேச்சரம் ஈசனை வேண்டி கொண்டு திருக்கேதீச்சரம் நோக்கி பயணம் தொடர்ந்தேன்! புத்தளம் இருந்து வில்பட்டு தேசிய பூங்கா
வழியாக செல்வதே நேர் வழி, ஆனால் அங்கு சாலை அமைக்கும் வேலைகள் நடந்து
கொண்டு இருப்பதால் அனுராதபுரம் வழியாக சுற்றிக்கொண்டு செல்ல வேண்டியது
ஆகிற்று. இலங்கையில் வடபாகத்தில் மாந்தை என்னும் மாதோட்ட நகரிலே உள்ளது
திருக்கேதீஸ்வரம். முன்னோரு காலத்தில் கேது பூசித்தமையால்இது கேதீஸ்வரம் என்று பெயர் பெற்றது. என்பர். ராகு, கேது தோஷம் நீங்கவும், சகல
ஐஸ்வர்யங்களும் பெற இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.“செய்ய கேது தலையற்ற
அந்நாள் திருந்து பூசனை செய்து முடிப்போன்” என்பது பழம்பாடல்.
தொண்டர்கள் நாள்தோறும் துதிசெய அருள்செய் கேதீச்சரமதுதானே என்பது
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் தேவாரம். பாலாவிக் கரையில் கௌரியம்பாள் சமேதராய் எழுந்தருளியுள்ளார் திருக்கேதீஸ்வரர்.தலவிருட்சம் – வன்னிமரம்.
சிதம்பரத்தைப்போல நாற்பது ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளதுஇத்தலம்.மன்னாரையடுத்த மாதோட்டம் முனர்னளில்மிகப் பெரிய துறைமுக நகரமாய் நிலவியது.இப்பதி ஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோரின்பாடல் பெற்றது.அக்காலத்தில் திருக்கேதீஸ்வரப் பகுதி கோயில்நகரம் என வழங்கியது. அதனைஇராஜஇராஜசேகரன் மகன் இராஜேந்திரன் தன் தந்தை பெயரால்அருள்மொழித்தேவன்வளநாடு என வழங்கினான்.பழைய திருக்கேதீஸ்வரம் பொலிவு 16 ம்நூற்றாண்டில் முற்பகுதியிலேயே அக்காலத்துவீசிய புயற்காற்றில் மங்கிவிட்டது.போர்த்துகீசியர் படையெடுப்பில் இக்கோயிலிலிருந்து தூண் மற்றும் பெரியகற்களை உடைத்து எடுத்து மன்னார்கோட்டையைக் கட்டியதாக வரலாறு. பின்னர்ஆங்கிலேயர் கையில் சிக்கிய இக்கோட்டை,காலத்தின் கொடுமையால்சிதலமடைந்து மிகவும் பாழடைந்த நிலையில்சிதைந்து மண்மேடாகியது.விடிவெள்ளியாக அவதரித்த யாழ்ப்பாணத்துசைவப் பெருவள்ளல் ஆறுமுக நாவலர் கனவில், அந்த இடைமருதின் ஆனந்தத் தேன்
சொரியும் பொந்து போல இந்த இலங்கை திருக்கேதீச்சரத்திலும் ஒரு தேன்பொந்து
மறைந்துள்ளது. அதனைச் சென்றடையுங்கள்.என்று சுட்டிக் காட்டப்பட்டது.

1893-ல்மீண்டும் அவ்விடத்தை சுமார் 43 ஏக்கர் நிலப்பரப்பினை, வாங்கி கோயிலுக்கு அளிக்க,மீண்டும் திருப்பணிகளுடன் 1910-ல்சிறுகோயில் கட்டப்பட்டது.1910 ஆம் ஆண்டு கும்பாபிடேகம். பின்னர் 1952 ஆம் ஆண்டில் , 31-10-60ஆம் நாளிலும்,
பின்னர் 6-6-71 ஆம் நாளிலும் கும்பாபிடேகங்கள் நடைபெற்றன. அண்மையில்
4-7-76 ஆம் நாள் மிகப்பெரிய கும்பாபிடேகம் நடைபெற்றது.
சுவாமி கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். கௌரியம்மன் தெற்கு நோக்கியுள்ளார். சுவாமிவாசலில் இராஜகோபுரத்தின் இருமருங்கிலும் விநாயகரும் சுப்பிரமணியரும் உள்ளனர். வெளியில் காவல் காத்தவாறு சிவனை நோக்கியிருப்பவர் பழைய நந்தியெம்பெருமானாவர். இனி உட்பிராகாரத்தில் வடபாலமைந்த
கோயில்களில் சுப்பிரமணியர், தேவசபை, சரபமூர்த்தி, நடராஜப் பெருமான்
எழுந்தள்ளார்கள். அடுத்து மேற்கு நோக்கியவாறு யாகசாலை, காலபைரவர்
கோயில், சனீஸ்வரன், சந்திரன் ஆகியோர் கோயில்கள் உள்ளன. கோபுரததின் கீழ்
இருபாலும் அதிகார நந்திகள் எழுந்தருளியுள்ளார்கள்.

கொடிமரம் கம்பீரமானதுநிருத்தமண்டபம் என அமைந்த இடத்தில்நவக்கிரகங்கள் உள்ளன.கிழக்கு வீதியில் திருஞானசம்பந்தர் மடம், சுந்தரர் மடம், நாட்டுக்கோட்டைச் செட்டிமார்மடம், அம்மா மடம், பசுமடம், பூநகரியார்மடம் முதலியன உள்ளன.
பண்டு நால்வருக்கு அறம் உரைத்தருளிப்பல்லுல கினில் உயிர் வாழ்க்கை
கண்ட நாதனார் கடலிங்கை தொழக்காதலித்துறை கோயில் வண்டு பண்செயுமாமலர்ப் பொழின் மஞ்சைநடமிடு மாதோட்டம்தொண்டர் நாடொறும் துதிசெய அருள் செய்கேதீச் சரமதுதானே(சம்பந்தர்)அங்கத்துறு நோய்கள் அடியார் மேல்ஒழித்தருளிவங்கம் மலிகின்ற கடன் மாதோட்ட நன்னகரில்
பங்கஞ்செய்த மடவாளடு பாலாவியின்கரைமேல்தெங்கம் பொழில் சூழ்ந்த திருக்கேதீச்சரத்தானே”(சுந்தரர்)

திருக்கேதீச்சரம் ஈசனை வேண்டி கொண்டு திருக்கோணேச்சரம் நோக்கி பயணம் தொடர்ந்தேன்! குற்றமிலாதார் குரைகடல் சூழ்ந்த,கோணமா மலையமர்ந் தாரைக்கற்றுணர் கேள்விக் காழியர் பெருமான்கருத்துடை ஞானசம் பந்தன்உற்றசெந் தமிழார் மாலையீ ரைந்தும் உரைப்பவர் கேட்பவர் உயர்ந்தோர் சுற்றமும் ஆகித் தொல்வினையடையார்தோன்றுவர் வானிடைப் பொலிந்தே. கி.பி7 ஆம் நூற்றாண்டில் சீரும் சிறப்புமாக விளங்கிய இக்கோயிலின் அழகினைக்கேள்விப்பட்ட திருஞான சம்பத்தர் ராமேஸ்வரத்தில் இருந்தபடியே ஞானக்கண்கொண்டு குற்றமில்லாதார் குறைகடல் சூழ்ந்த கோண மாலையமர்ந்தாரை…. என தேவாரப்பதிகத்தில் பாடியுள்ளார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 271 சிவாலயங்களில் இது 270 வது தேவாரத்தலம்ஆகும். ராவணன் தனது தாயாரின் சிவபூஜைக்காகதட்சிண கயிலாயமான திருகோணமலையைப் பெயர்த்ததாகவும் ஒரு செய்தி தட்சிண
கயிலாய புராணத்தில் உள்ளது. இதற்குச் சான்றாக ராவணன் வெட்டு என்ற
மலைப்பிளவு இன்னும் இப்பகுதியில் காணப்படுகிறது.

இவ்வாலயத்தை இலங்கையை ஆண்ட மனு மாணிக்கராஜா என்ற மன்னன் கி.மு.1300ஆம் ஆண்டிற்கு முன்னர் இக்கோயிலைக் கட்டினான்
என்று சான்றுகள் கூறுகின்றன. கச்சியப்ப சிவாச்சாரியார் சிவபெருமானின் ஆதி இருப்பிடங்களில் திபெத்திலுள்ள திருக்கயிலாய மலையினையும், சிதம்பரம்
கோயிலையும், திருகோண மலையையும் கந்த புராணத்தில் மிக முக்கிய மூன்றினுள்
ஒன்றாகக் குறிப்பிட்டுள்ளார். 1624 வருடம் சித்திரை புத்தாண்டு தினத்தில்
சுவாமி மாதுமை அம்பாள் சமேத திருக்கோணேச்சரப் பெருமான் நகர்வலம் வந்த வேளையில் போர்ச்சுகீசியத் தளபதி வீரர்களுடன் பக்தர்கள் போல வேடமிட்டு
கோயிலினுள் சாமி நுழைந்த ஆங்கிருந்தவர்களை வெட்டிக் கொன்றுவிட்டு கோயிலிலிருந்த தங்க நகைகள், நவரத்தினங்கள் மற்றும் வெள்ளிப் பொருட்களை கொள்ளை அடித்துச் சென்றனர். ஆசியாவிலேயே மிகச் செழிப்பான
செல்வவளம் கொண்ட இக்கோயில் முற்றிலும் சூறையாடப்பட்டது. பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் போதும் எவ்வித பூஜைகளும் இங்கு நடைபெற அனுமதிக்கப்படவில்லை. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் மாலுமிகள்,பக்தர்கள், சுவாமி பாதைக்குச் சென்று பூ, பழம், தேங்காய் உடைத்து தங்களது பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொண்டனர். மீண்டும் இலங்கை சுதந்திரம் பெற்ற பின்பு சுமார் 450 வருடங்களின் பின்னர் 1952 ல் திருகோணமலையில் உள்ள பெரியார்களால் மீள கட்டுவிக்கப்பட்டது. முன்னைய கோயிலுடன் ஒப்பிடும் போது இப்போது இருக்கும் கோயில் மிகச்சிறியதே!

-சித்தர்களின் குரல் – shiva shangar

Sharing is caring!