உங்களின் ஆயுளை அதிகரிக்க வேண்டுமா?

நமது அன்றாட உணவுகளில் பல பருப்புகள் பயன்படுத்தப்படுகிறது, அதில் ஒவ்வொன்றுக்கும் ஒரு சுவையும், பலனும் இருக்கிறது. அதில் பாசிப்பருப்பு முதன்மை இடத்தில் உள்ளது.

ஒரு கப் சமைக்கப்பட்ட பாசி பருப்பில் 147 கலோரிகள் இருக்கிறது.

இதில் 1.2 கிராம் கொழுப்பு, 28மிகி சோடியம், 12 கிராம் நார்ச்சத்துக்கள், 3 கிராம் சர்க்கரை மற்றும் 25 கிராம் புரோட்டின் உள்ளது.

அத்துடன் அதிக புரோட்டின்களை கொண்ட இதில் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாகவே இருக்கிறது.

மேலும் சாதத்துடன் பாசிப்பருப்பையும் ஒன்றாக சேர்த்து சாப்பிடும்போது அது உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.

அந்தவகையில் பாசி பருப்பை சாதத்துடன் சேர்த்து சாப்பிடும்போது கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

  • பாசி பருப்பில் அமினோ அமிலங்கள் இருக்கிறது, அரிசியில் சல்பர் அடிப்படையிலான அமினோ அமிலங்கள் இருப்பதனால் அரிசி சாதத்துடன் பாசி பருப்பை சேர்த்து சாப்பிடும் போது அது நமது தசைகளை வலுப்படுத்த அதிகம் உதவுகிறது.
  • பாசி பருப்பில் அதிகளவு வைரஸ் மற்றும் பாக்டீரிய எதிர்ப்பு பொருள்கள் உள்ளது. இது ஆபத்தை உண்டாக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களில் இருந்து உங்களை பாதுக்கின்றது.
  • அரிசியில் ஸ்டார்ச் என்னும் நார்ச்சத்து உள்ளதால் இது நமது குடலில் நல்ல பாக்டீரியாக்களை வளர செய்கிறது. இது நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும்.
  • பாசி பருப்பில் அதிகளவு புரோட்டின் உள்ளது, அதேபோல அரிசியில் இருக்கும் நார்ச்சத்துக்கள் உடலை தூய்மைப்படுத்துகிறது. இது முடிவளர்ச்சியையும், சரும பொலிவையும் ஊக்குவிக்கிறது.
  • சிவப்பு இரத்த அணுக்கள் உருவாகுவதற்கு தேவைப்படும் இரும்புச்சத்துக்கள் பாசி பருப்பில் அதிகம் உள்ளதால் இரும்புசத்து குறைபாடு ஏற்படுவதை தடுப்பதுடன் அனீமியா ஏற்படும் வாய்ப்பையும் குறைக்கிறது.
  • பாசி பருப்பு தயாரிக்கப்படும் போது அதில் சேர்க்கப்படும் மஞ்சள், சீரகம் மற்றும் மல்லி தூள் போன்றவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும்.

Sharing is caring!