உங்களுக்கு அரிசி சாப்பிடும் பழக்கம் இருக்கா?

பலர் சுவையாக இருக்கும் பொருளுக்கு அடிமையாகி விடுவார்கள். சிலர் சிலேட்டு குச்சி சாப்பிடுவார்கள். சிலர் சாக்பீஸ், சிலர் மண் சாப்பிடுவார்கள். ஆனால் ஒரு சில அரிசியை சாப்பிடுவார்கள்.

இது ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைய வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் அனீமியா ஏற்படுவதோடு ஆரோக்கிய குறைபாட்டினை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அரிசியை வேக வைக்காமல் சாப்பிட்டால் எந்த மாதிரியான பிரச்சினைகளை அனுபவிக்கக்கூடும் என முழுமையாக அறிந்து கொள்ளுங்கள்.

  • அரிசியில் செல்லுலோஸ் என்னும் பொருள் உள்ளது. இது தானியங்களுக்கு பாதுகாப்பை வழங்குகிறது. ஆனால் மனித செரிமான மண்டலத்தினால் இந்த செல்லுலோஸை முழுமையாக செரிக்க முடியாது.
  • ஆகவே அரிசியை வேக வைக்காமல் சாப்பிடும் போது, அது விரைவில் செரிமானமாகாமல் அஜீரண கோளாறை உண்டாக்கும்.
  • அரிசியில் பேசில்லஸ் சீரஸ் என்னும் பாக்டீரி உள்ளது. அது உடலினுள் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் முழுமையாக அழித்து விடும்.
  • இதன் விளைவாக வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
  • பெரும்பாலும், இம்மாதிரியான விளைவு அரிசி சாப்பிட்ட 24 மணிநேரத்தில் அனுபவிக்க நேரிடும்.
  • அரிசியில் உள்ள லெசித்தின் என்னும் பூச்சிக் கொல்லி உடலினுள் செல்லும் போது, செரிமான செல்களை அழித்துவிடுவதோடு, இது அதிகமாக உடலினுள் சேரும் போது, குடல் புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோய் அபாயத்தையும் அதிகரிக்கும்.
  • எனவே அரிசியை பச்சையாக சாப்பிடும் பழக்கத்தை உடனே கைவிடுங்கள்.
எச்சரிக்கை

ஒருவருக்கு தொடர்ந்து வேக வைக்காத அரிசி அல்லது பச்சை உணவுகள் சாப்பிடும் ஆவல் அதிகமானால், தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

இதனால் வேக வைக்காத அரிசியால் உடலுக்கு ஏற்படும் பிரச்சனை, தீவிரமாகி மோசமாவதைத் தடுக்கலாம்.

Sharing is caring!