உங்கள் உடலில் புழுக்கள் அதிகம் உள்ளது என்பதை வெளிப்படுத்தும் சில அறிகுறிகள்!

பலருக்கு தங்கள் உடலில் புழுக்கள் அதிகம் உள்ளது என்று தெரியாமலேயே உள்ளனர். ஒட்டுண்ணிகளான இந்த புழுக்கள், நம் உடலினுள் பல வழிகளில் நுழைந்து, நாம் உண்ணும் உணவுகளை உட்கொண்டு, நம்மை மெதுவாக அழிக்கும். நம் உடலைத் தாக்கும் ஒட்டுண்ணிகளில் பல வகைகள் உள்ளன.


இந்த ஒட்டுண்ணிகளான புழுக்களை அவ்வப்போது உடலில் இருந்து வெளியேற்ற வேண்டும். இல்லாவிட்டால், அவை நம்மை கொஞ்சம் கொஞ்சமாக உட்கொண்டு அழிக்க ஆரம்பிக்கும். அதற்கு முதலில் ஒருவர் தங்களில் உடலில் புழுக்கள் இருந்தால் தென்படும் அறிகுறிகள் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும்.

இங்கு ஒருவரது உடலில் புழுக்கள் அதிகமாக இருந்தால் தென்படும் அறிகுறிகள் பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து உடலைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

நாள்பட்ட செரிமான பிரச்சனைகள் வயிற்றில் புழுக்கள் அதிகம் இருப்பின் அடிக்கடி வயிற்றுப் போக்கு ஏற்படும். மேலும் வாய்வுத் தொல்லை, குமட்டல், வயிற்று உப்புசம், மலச்சிக்கல், வயிற்றில் ஒருவித எரிச்சலுடன் இருக்கும். ஒருவேளை நீங்கள் நார்ச்சத்துள்ள உணவுகளை தினமும் உட்கொண்டு வந்தும், உங்களுக்கு இப்பிரச்சனை நீடித்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

அடிவயிற்று வலி ஒட்டுண்ணிகள் சிறு குடலின் மேல் வாழ்ந்து, எரிச்சல், அழற்சி மற்றும் வலியை உண்டாக்கும். மேலும் புழுக்கள் கழிவுப் பொருட்கள் உடலில் இருந்து வெளியேறுவதில் தடையை ஏற்படுத்தி, அடிவயிற்றில் வலியை ஏற்படுத்தும். ஒருவேளை உங்களுக்கு அடிவயிற்று வலி அதிகமானால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

மலப்புழை அரிப்பு இது அனைவருக்கும் தெரிந்த ஓர் அறிகுறி தான். அது மலப்புழையில் அரிப்பு, குடைச்சல் அல்லது எரிச்சல் ஏற்படுவது. குறிப்பாக இம்மாதிரியான அரிப்பு இரவில் ஏற்படும் போது தூக்கத்திற்கு இடையூறு ஏற்பட்டு, மறுநாள் மிகுந்த களைப்பை அடையக்கூடும்.

சோர்வு மற்றும் பலவீனம் வயிற்றில் புழுக்கள் அதிகமாக இருந்தால், அவை உடலின் சத்துக்களை உறிஞ்சி, ஊட்டச்சத்துக் குறைபாட்டை ஏற்படுத்தி, உடலை பலவீனமாக்கிவிடும். உடல் பலவீனமானால், சோர்வு அதிகரித்து, நினைக்கும் வேலையை கூட செய்ய முடியாமல் டென்சன் அதிகரிக்கும். எனவே வாரத்திற்கு ஒருமுறை வயிற்றுப் புழுக்களை கொல்லும் முறையை மேற்கொள்ளுங்கள்.

பசியின்மையுடன் எடை குறைவு பசியின்மை அதிகரிப்பதோடு, உங்கள் எடையும் குறைய ஆரம்பித்தால், வயிற்றில் புழுக்கள் உள்ளது என்று அர்த்தம். அதிலும் அதிகமான அளவில் புழுக்கள் உடலில் பெருகியுள்ளது என்று அர்த்தம். எனவே இங்மமாதிரியான சூழ்நிலையில் உடனே மருத்துவரை அணுகி தீர்வு காணுங்கள்.

மன இறுக்கம் உடலில் புழுக்கள் அதிகமாக இருக்கும் நேரத்தில், மன இறுக்கம், மன நிலையில் ஏற்றத்தாழ்வு போன்றவை ஏற்படும். அதோடு செரிமான பிரச்சனையும் இருந்தால், இருமடங்கு மன வேதனையை சந்திக்கக்கூடும். ஆகவே திடீரென்று எக்காரணமும் இல்லாமல் மன இறுக்கமாக இருப்பது போல் உணர்ந்தால், அதற்கு காரணம் வயிற்றுப் புழுக்கள் தான்.

பற்களை கொறிப்பது புழுக்கள் உடலில் அதிகம் இருந்தால், பற்களை கொறிப்போம். ஏனெனில் உடலில் அதிகரித்த புழுக்களின் பெருக்கத்தால் தேங்கும் கழிவுகளால் மன வேதனையும், சோர்வும் அதிகரிக்கும். அதனால் தான் குழந்தைகளுள் சிலர் இரவில் படுக்கும் போது பற்களைக் கொறிக்கின்றனர்.

இரத்த சோகை உருளைப்புழுக்கள், பென்சில்வேனியா போன்றவை உடலில் உள்ள வைட்டமின்கள், இரும்புச்சத்து போன்றவற்றை உறிஞ்சி, இரும்புச்சத்து குறைபாட்டை உண்டாக்கும். ஆகவே உங்களுக்கு இரத்த சோகை வந்தால், முதலில் உடலில் உள்ள புழுக்களை அழிக்கும் மருந்துகளை உட்கொண்டு, உடலை சுத்தப்படுத்துங்கள்.

சரும பிரச்சனைகள் உடலினுள் ஒட்டுண்ணிகள் அதிகம் இருப்பின், சரும பிரச்சனைகளான அரிப்புகள், எரிச்சல், பல வகையான அலர்ஜிகளை சந்திக்க நேரிடும். அதுமட்டுமின்றி, இந்த புழுக்கள் வெளியேற்றும் கழிவுகளால், இரத்தத்தில் ஈயோசினோபில்கள் அதிகரித்து, இதனால் புண்கள், உறுப்புக் கோளாறு, மூட்டு வீக்கம் மற்றும் அல்சர் போன்றவை ஏற்படும். ஆகவே உங்களுக்கு எவ்வித காரணமும் தெரியாமல் திடீரென்று சரும பிரச்சனைகளை சந்தித்தால், மருத்துவரை உடனே அணுகுங்கள்.

தசைகள் மற்றும் மூட்டுக்களில் வலி ஒரு குறிப்பிட்ட ஒட்டுண்ணிகள், மூட்டு மற்றும் தசைகளின் மென்மையான திசுக்களை சிதைவுறச் செய்து, எரிச்சலையும், வலியையும் உண்டாக்கும். பலரும் மூட்டுக்களில் வலி ஏற்படும் போது ஆர்த்ரிடிஸ் ஆக இருக்கக்கூடும் என தவறாக நினைக்கின்றனர். உடலில் புழுக்கள் அதிகம் இருந்தாலும், இம்மாதிரியான வலியை மூட்டுக்களில் சந்திக்க நேரிடும்.

Sharing is caring!