உங்கள் குல தெய்வம் எது?

எல்லோருக்கும் பரம்பரை பரம்பரையாக முழுமுதற்கடவுளாக  குலதெய்வம் விளங்குகிறது.   குடும்பத்தில் நடக்கும் சுபவிசேஷங்கள்  அனைத்துக்குமே முதல் அழைப்பு குலதெய்வத்துக்கு தான். திருமணத்தடைகளை நீக்கவும், குழந் தைப் பேறையும்  விரும்புபவர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுவதில் முதல் பங்கு குலதெய்வத்துக்கு உண்டு.

குழந்தைக்கு போடும் முதல் மொட்ட யும் குலதெய்வ கோயில்களில்  அடிக்கப்படுவது வழக்கமான ஒன்று.  காதணி விழா, பூப்புனித நீராட்டு விழா, புதுமனை புகுவிழா, திருமணத்தின் முதல் பத்திரிகை  குலதெய்வத்தின் பாதங்களில் முதலில் சமர்ப்பித்தால் அதைத் தொடர்ந்து நடகும் அனைத்தும் நன்றாகவே நடக்கும் என்பது  முன்னோர்களின் வாக்கு.

குடும்பத்தில் கெட்ட நிகழ்வுகள், அசம்பாவிதம் ஏதும் நேர்ந்தாலும் குலதெய்வத்தை நேரில் சென்று தரிசித்தால் போதும் வாழ்வில் நல்லது நடக்கும்  என்று பெரியோர்கள் சொல்வார்கள்.  பங்காளிக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் கூட குலதெய்வ கோயில் வழிபாட்டில் இருதரப்புக்கும் நன்மை யாகவே முடிந்துவிடும் அளவுக்கு முக்கிய வழிபாடாக இது விளங்குகிறது.

சிவன்,விஷ்ணு, முருகன், பிள்ளையார் என்று  தெய்வங்களை வழிபட்டாலும் முதல் வழிபாடு குலதெய்வ வழிபாடுதான். ஆனால் முன்னோர்களின் வழியில் வழிபட்ட குலதெய்வத்தை அறியாமல் இருப்பவர்கள் என்ன செய்வது? எப்படி குலதெய்வத்தைக் கண்டறிவது என்று தவிப்பார்கள்..  உங்கள் குலதெய்வத்தை கண்டறியமுடியவில்லையென்றால் உங்கள் ஜாதகத்தின் ஐந்தாம் இடத்தை வைத்து உங்கள் குலதெய்வத்தைக் கண்டறியலாம்.

ஐந்தாம் வீட்டில் குருவும், சூரியனும் சம்பந்தப்பட்டிருந்தால் சிவ அம்சம் பொருந்திய குரு ஸ்தானத்தில் உள்ளவர் தான் உங்கள் குலதெய்வத்துக்குரியவர். சிலருக்கு இயல்பிலேயே குறிப் பிட்ட தெய்வத்தின் பேரில் ஈடுபாடு இருக்கும். பரம்பரை பரம்பரையாக உங்கள் உணர்வில் ஊறிப்போனதால் உங்களையும் அறியாமல் அந்த தெய்வத்தின் பேரில் ஈடுபாடு இருக்கும். அப்படியும் குலதெய்வத்தைக் கண்டறிய முடியாதவர்கள் என்ன செய்யலாம்?

குன்று இருக்கும் இடமெல்லாம்  குமரன் இருக்கும் இடம். ஆனால் திருச்செந் தூரில் மட்டும் முருகன் கடலின் அருகில் இருப்பது தனிச்சிறப்பு. திருச்செந்தூர் சம்ஹார ஸ்தலம். இந்த தலமானது குருவுக்கும், செவ்வாய்க்கும் உரிய தலமா கவும் உள்ளது. மனதில் இருக்கும் தீயசக்திகளை அழிப்பதில் திருச்செந்தூர் முதன்மையான இடத்தில் உள்ளது.

மனிதர்களுக்கு ஏற்படும் பேராசை, காமம், கோபம் போன்றவற்றை அழிக்கும் சக்தி  இந்த திருத்தலத்துக்கு உண்டு. வாழ் வில் ஏற்படும் அனைத்து தடைகளையும் நீக்கி வாழ்வில் நிம்மதியையும், அடைக் கலமாக தன்னை நாடி வரும் பக்தர்களை தீமைகள் அண்டவிடாமல் குலதெய்வம் போல் காப்பதிலும்  அருள் தரும் திருச்செந்தூர் முருகனை  குலதெய்வமாக ஏற்கலாம்.

Sharing is caring!