உங்கள் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டுமா?

பொதுவாக நாம் அனைவரும் எக்கால நிலையிலும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்னை என்னவென்றால்  அது சரும வறட்சி என்றால் அது மிகையாகாது.

சரும வறட்சி என்பது காலநிலை மாற்றத்தினாலும், நாம் உண்ணும் உணவில் ஏற்படும் மாற்றத்தினாலும் ஏற்படக்கூடியவை. இதற்கு முறையான  பராமரிப்பு அவசியமான ஒன்று.

மாய்ஸ்சரைசர்  என்பது நம் சருமத்தில் வறட்சியை நீக்கி, ஈரப்பதமாக வைத்திருப்பதற்காகவும், தளர்ந்த சருமத்தை போக்கி இளமையாக வைத்திருக்கவும், நாம் மாய்சரைஸர்கள் (lotion) உபயோகபடுத்துகிறோம்.

சருமத்தில் வெடிப்புகள், சுருக்கள், சருமம் மென்மை இழத்தல்,கோடுகள் தோன்ற காரணமான வானிலை மற்றும் காலநிலையால் சருமம் எளிதில் வறட்சி அடைந்து விடுகிறது. எனவே, பலர்  இத்தகைய வறட்சியை தடுப்பதற்கு பல அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவார்கள். அதற்கேற்றார்ப்போல சந்தைகளிலும் கெமிக்கல் (chemical)  மிகுந்த  பல லோஷன்கள் கிடைக்கின்றன.

இவைகள் சரும செல்களை விரைவில் பாதித்து சருமத்தின் அழகையே முற்றிலும் கெடுத்து விடுகிறது. எனவே, இயற்கையாகவே நமக்கு கிடைக்கும் பொருட்களை கொண்ட லோஷன்களை  நாம் பயன்படுத்தினால் எளிதில் சரும பாதிப்பிலிருந்து விடுபடலாம்.

Sharing is caring!