உங்கள் தலையில் பல்லி விழுந்தால்….? கடவுள் தான் தஞ்சமாம்…!!

நூற்றாண்டுகளை கடந்தும் நம் மக்களிடையே இன்னும் பல பழமையான நம்பிக்கைகள் இருக்கிறது. அப்படி தமிழர்கள் மத்தியில் இருக்கும் தொன்மையான நம்பிக்கைகளில் ஒன்று பல்லியை பற்றியதாகும்.மற்ற உயிரினங்களை போல பல்லியை ஒதுக்க முடியாது. இதனை இயற்கையின் தூதுவனாகவே மக்கள் நினைக்கிறார்கள்.பல்லி விழும் பலன்கள் பார்ப்பது நமது சாஸ்திரங்களில் மிகவும் முக்கியமானதாகும். இந்தப் பதிவில் பல்லி உங்கள் விதியை எப்படி தீர்மானிக்கிறது என்று பார்க்கலாம்.

பல்லி தலையில் விழுந்தால்:பல்லி உங்கள் தலையில் விழுந்தால் நீங்கள் கடவுளை வேண்டுவதை தவிர வேறு வழியில்லை. ஏனெனில் இது மிகவும் அபசகுணமான ஒன்றாகும். இவ்வாறு விழுவது துர்மரணத்தின் அறிகுறியாக கருதப்படுகிறது.

வலது மணிக்கட்டில் விழுந்தால்: இது பல்லி அடிக்கடி நம் மேலே விழும் ஒரு இடமாகும். ஏனெனில் நாம் பெரும்பாலும் நமது வலதுகையைத்தான் அனைத்தையும் திறக்க பயன்படுத்துவோம். அதனால் பல்லி நமது வலது கையில் விழ அதிகம் வாய்ப்புள்ளது. இது ஒரு கெட்ட சகுனமாகும். இடது மணிக்கட்டு:இடது மணிக்கட்டு வலது மாணிக்கட்டிற்கு நேர் எதிரானதாகும். ஏனெனில் இது நல்ல சகுனம். ஆனால் இடது கை பழக்கமுள்ளவர்களுக்கு இது பொருந்தாது.நகத்தை தொட்டால்: பல்லி உங்கள் நகத்தை தொட நேர்ந்தால் நீங்கள் சில நஷ்டங்களை சந்திக்க போகிறீர்கள் என்று அர்த்தம். அதனை உங்களால் தவிர்க்கவும் இயலாது, அதற்கு தயாராய் இருந்து கொள்ள மட்டுமே முடியும்.விரல்கள்: ஒருவேளை உங்கள் இடது கை விரல்கள் மீது பல்லி விழுந்தால் உங்களை நோக்கி பல துன்பங்கள் வரப்போகிறது என்று அர்த்தம். உங்கள் வாழ்க்கையை இருள் மேகம் சூழப்போகிறது எச்சரிக்கையாய் இருங்கள். வலது கை விரல்கள் மீது விழுந்தால் பிடித்தவர்களிடம் இருந்து பரிசை வாங்க தயாராக இருங்கள்.

Sharing is caring!