உங்கள் தலை முடி நீளமாக வளர வேண்டுமா ??

ஒருவரின் அழகை அதிகரிப்பதில் தலைமுடிக்கு முக்கிய பங்கு உண்டு.

பல தலைமுறையாக கூந்தல் பராமரிப்பு முறை நடைபெற்று வருகிறது. இன்றைய நாட்களில் கூந்தலைப் பராமரிப்பதில் பலரும் தனிக்கவனம் செலுத்தி வருகின்றனர்.

தற்போது சந்தைகளில் கூந்தல் பராமரிப்பிற்கான பலவித பொருட்கள் விற்கப்பட்டு வருகின்றன.

இவை கூந்தல் உதிர்வு, வறண்ட தலைமுடி, பொடுகு என்று பல வித கூந்தல் பிரச்சனைக்கு தீர்வைத் தருவதாக விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.

இவைகளினால் கூந்தல் புத்துணர்ச்சி பெறுகிறது என்பதை உறுதியாக யாராலும் கூற முடியாது. என்னதான் இருந்தாலும் நம் தலைமுறை சொல்லி கொடுத்த குறிப்புகளுக்கு ஈடாகுமா? அவற்றில் ஒன்று தான் இது. முயற்சி செய்து பாருங்கள்.

வாழைப்பழம் மற்றும் தேங்காய் எண்ணெய் பேக்
  • ஒரு வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நீளமான கூந்தல் என்றால் இரண்டு வாழைப்பழம் எடுத்துக் கொள்ளவும்.
  • அந்த வாழைப்பழத்தை எடுத்து நன்றாக மசித்துக் கொள்ளவும். வாழைப்பழ விழுதில் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும்.
  • வறண்டு அழுக்காக இருக்கும் தலையை சுத்தம் செய்ய, தேவைப்பட்டால் ஒரு சிறு கற்பூரத்தை இந்த கலவையுடன் சேர்த்து கலக்கவும்.
  • இந்த கலவையை உங்கள் உச்சந்தலை, கூந்தல் வேர் மற்றும் முழு நீள கூந்தலில் தடவவும்.
  • அரை மணி நேரம் இந்த கலவை உங்கள் கூந்தலில் ஊறட்டும். பிறகு வழக்கமான ஷாம்பூ அல்லது வீட்டில் தயாரிக்கப்பட்ட சீயக்காய் கொண்டு தலைமுடியை அலசவும். இப்படியே 2 அல்லது 4 வாரம் செய்தால் நல்ல மாற்றத்தினை காணமுடியும்.

Sharing is caring!