உங்கள் பிறந்த எண்ணில் துணை கிடைத்தால் கண்ணை மூடிக்கொண்டு திருமணம் செய்யுங்கள்…. வாழ்க்கை சொர்க்கம் தான்…!

ஒரே வாழ்க்கைப் பாதை எண் கொண்டவர்கள் திருமணம் செய்துகொண்டால் அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று இங்கு பார்ப்போம்.

1 மற்றும் 1: தலைமை பொறுப்பில் இருக்க வேண்டும் என்று விரும்பும் இருவர் இவர்கள், இருவருமே அதிக சுதந்திரத்தை விரும்புபவர்கள்.மற்ற எந்த எண்ணைக் காட்டிலும் ஒரே இரண்டு 1 ஜோடிகள் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்வார்கள்.இது ஒரு ஆபத்தில்லாத உறவாகும், ஏனெனில் அவர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட தொடங்கும்போது அது அவர்கள் இருவருக்கும் நன்மையையே வழங்கும். இது அவர்களின் உறவில் உற்சாகத்தையும்ம் சுவாரஸ்யத்தையும் அதிகரிக்கும்.

2 மற்றும் 2: இந்த ஜோடி அன்பை கொடுத்துப் பெறுவதில் அதிக ஆர்வத்துடன் இருப்பார்கள். தங்களுக்குள் எழும் எந்தவொரு பிரச்சினைக்கும் பொதுவான காரணத்தைக் கண்டுபிடிப்பதில் அவர்களுக்கு கொஞ்சம் சிரமம் எழும்.இவர்கள் இருவரும் புரிந்து கொள்ள வேண்டிய ஒரே விஷயம் அடிப்பதால் ஏற்படும் காயங்களை விட சொற்களால் ஏற்படும் காயங்கள் அதிக வலியை ஏற்படுத்தும்.ஆனால், இவர்கள் பெரும்பாலும் அமைதியானவர்களாக இருப்பார்கள் அதேசமயம் ஒருவரையொருவர் மதிப்பவராகவும் இருப்பார்கள்.

3 மற்றும் 3:இவர்களின் ஜோடி மிகவும் சுவாரஸ்யமானது என்று கூறப்படுகிறது. ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொண்டு ஆதரவாக இருக்கும் இவர்களை போல வேடிக்கை மற்றும் மகிழ்ச்சியை அனுபவிப்பவர்கள் யாரும் இருக்க முடியாது.யாரை யார் கட்டுப்படுத்தவது என்ற போட்டியால் இவர்களுக்குள் பிரச்சனைகள் எழ வாய்ப்புள்ளது. ஆனால், அது விரைவில் தீர்ந்துவிடும்.

4 மற்றும் 4: இந்த ஜோடியை உறுதி மற்றும் பாதுகாப்பு என்ற வார்த்தைகளை கொண்டு வரையறுக்கலாம். ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பதில் இவர்களை மிஞ்ச முடியாது.இருவரும் தங்கள் இலட்சியங்களை பகிர்ந்து கொள்வார்கள் அவற்றை சாதிக்க ஒருவருக்கொருவர் உதவியும் செய்து கொள்வார்கள். காதலிலும், தமபத்யத்திலும் இவர்களுக்கு எந்த குறையும் இருக்காது.இவர்களிடம் இருக்கும் பிரச்சினை என்னவென்றால் இவர்களுக்குள் பிரச்சினை எழுவது அரிது, ஆனால் அப்படி எழுந்தால் அது அவ்வளவு சீக்கிரம் ஓயாது.

5 மற்றும் 5:இந்த ஜோடிகள் மிகவும் இணக்கமான ஜோடிகளாக இருப்பார்கள். இருவருமே சுதந்திரத்தையும், சாகசத்தையும் விரும்புபவர்களாக இருப்பார்கள்.இந்த ஜோடிகளில் தங்கள் துணை என்ன நினைக்கிறார்கள், எங்கே செல்கிறார்கள் என்பதை மற்றவர் எளிதில் கணித்து விடுவார்.இவர்களின் பிரச்சினை கவனக்குறைவு ஆகும், ஏனெனில் இருவருமே வேடிக்கையானவர்களாக இருப்பதால் இவர்களிடம் பொறுப்புணர்ச்சி குறைவாக இருக்கும்.

6 மற்றும் 6:இந்த ஜோடிகள் எதார்த்ததாலும், காதலாலும் நிரம்பியவர்கள். வீடும், குடும்பமும்தான் இவர்களுக்கு மிகவும் முக்கியமானவை ஆகும்.இவர்கள் மிகவும் புரிந்துணர்வு கொண்ட ஜோடிகளாக இருப்பார்கள். தங்களின் துணைக்கு எது பொருத்தமாக இருக்கும் இருக்கும் மற்றொருவர் அறிவார்.எனவே இவர்கள் ஒருவரையொருவர் நன்கு அறிந்து கொள்வார்கள். யார் குடும்பத்தை வழிநடத்தவுது என்ற போட்டி இவர்களுக்குள் அடிக்கடி எழும்.

7 மற்றும் 7:7 ஆம் எண்ணில் பிறந்தவர்களின் விசித்திரமான குணங்களை மற்றொரு 7 ஆம் எண்ணில் பிறந்தவர்களால்தான் புரிந்து கொள்ள முடியும்.சரியான புரிதல் மற்றும் அணுகுமுறை மூலம் இவர்கள்வாழ்க்கையை எப்படி மகிழ்ச்சியாக கழிக்க வேண்டும் என்று நன்கு அறிவார்கள்.இருவரின் எண்ண ஓட்டங்களும் ஒரே மாதிரி இருக்க வாய்ப்புள்ளது, எனவே ஒருவரை ஒருவர் எளிதில் புரிந்து கொள்வார்கள்.இவர்களுக்குள் இருக்கும் பிரச்சினை யார் முதலில் சமாதானத்தை தொடங்குவது என்பதுதான் ஏனெனில் இருவருமே பிடிவாதக்காரர்களாக இருப்பார்கள்.

8 மற்றும் 8:அதிக உணர்ச்சிகளும், காதலும் நிறைந்த ஜோடி இவர்கள். இவர்களுக்குள் இருக்கும் காதல் மிகவும் வலிமை வாய்ந்ததாக இருக்கும்.இவர்கள் எளிதில் மற்ற காரணங்களால் திசைதிருப்பப்படுவார்கள். உறவு என்பது திடமாக இருப்பதால், தம்பதியினர் வார்த்தையிலோ செயலிலோ உணர்வின் ஆழத்தைத் தொடர்புகொள்வதில் அதிக சிரமப்படுவார்கள்.இருவரும் தங்களுக்கான நேரத்தை சரியாக திட்டமிட்டுக் கொண்டால் இவர்கள் வாழ்க்கையில் எந்த பிரச்சினையும் வராது.

9 மற்றும் 9:இந்த ஜோடி அறிவுசார்ந்த ஜோடியாக இருப்பார்கள். இவர்களின் ஒருவரின் வசீகரம் மற்றவரை ஈர்ப்பதாக இருக்கும். சுயநலமில்லாமல் இவர்கள் வாழ்வதால் வாழ்க்கையில் சில சவால்களை சந்திக்க நேரிடும்.ஒருவரையொருவர் பரஸ்பரம் புரிந்து கொண்டு காதலாகவும், ஆதரவாகவும் இருந்து துணையின் ஆசை மற்றும் கனவுகளை நிறைவேற்ற இவர்கள் முயலுவார்கள்.

Sharing is caring!