உங்கள் வாழ்க்கையில் சுக்ர திசை அள்ளிக்கொடுக்க இதை செய்யுங்கள்!

ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளுக்கு அதிபதியாக விளங்குபவர் சுக்ரன். இவருக்கு புதன், சனி, ராகு, கேது ஆகிய கிரகங்கள் நண்பர்கள். சூரியனும், சந்திரனும் பகை கிரகங்கள். சுக்ர தசை, இருபது ஆண்டுகள். சுக்கிரன் தன்னை வழிபடுபவர்களுக்கு சுகம், அழகு, நாவண்மை, நன்மதிப்பு போன்ற நற்பலன்களை அருள்வார்.

இல்லற சுகத்தை தருபவரும் அவரே. சுக்ர திசை நடக்கும் போது, தீயக்கோள்களின் பார்வைபட்டாலோ, தீயச் சேர்க்கை ஏற்பட்டாலோ. கெடுதியான பலன்களே உண்டாகும். இதனையே சுக்ர தோஷம் என்பார்கள்.

வெள்ளிக்கிழமையில் விரதம் இருந்து, சுக்ர பகவானுக்கு வெள்ளை ஆடை அணிவித்து, வெண்தாமரையால் அர்ச்சித்து, நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் சுக்ர தோஷங்கள் விலகும்.

கோவிலுக்கு சென்று, நவக்கிரகத்தை, கீழ் கண்ட மந்திரங்கள் சொல்லி, ஒன்பது சுற்றுகள் சுற்றுவது சிறப்பு.

ஓம் ஹரீம் ஆதித்யாய ச சோமாய மங்களாய புதாயச குரு சுக்கிர சனிப்யச்ச ராகவே கேதவே நமக.

ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே:
தநுர் ஹஸ்தாய தீமஹி
தன்னோ சுக்கிர ப்ரயோதயாத்.

 ஹிமகுந்த ம்ருனாலாபம் ஸதத்யானாம் பரமம் குரும்
ஸர்வசாஸ்த்ர பரவக்தாரம் பார்க்கவம் பரணமாம்யகம்

Sharing is caring!