உங்கள் வீட்டிலும் மாயமாய் தோன்றுவான் மாயக்கண்ணன்…

மாயக்கண்ணன் கிருஷ்ணனை விரும்பாதவர்கள் யாராவது இருக்கிறார்களா என்ன. அதிலும் குறும்புக்காரன் வீட்டுக்கு வரும் நல்ல நாள் ஆயிற்றே. யார் அழைத்தாலும் வீட்டுக்கு வருவானா.. அப்படியானால் எத்தனை பக்தர்களின் வீட்டுக்கு அவன் வருகை புரிவான் என்று கேட்கலாம். ஆனால் நினைத்த நேரத்தில் நினைத்த மாத்திரத்தில் அருள் புரிய கண்ணபிரான் பல்லாயிரம் கண்ணனாக உருவெடுத்து எல்லா பக்தர்கள் வீட்டுக்கும் வருவான்.

கண்ணனை மனதில் நினைத்து ஆராதனை செய்யும் பக்தை ஒருவள் இருந்தாள். எப்போதும் கண்ணனை நினைக்கும் அவளுக்கு ஒரே ஆனந்தம் இருக்காதா பின்னே.. அவள் மனம் கவர்ந்த குறும்பன் பிறந்த நாள் வரவிருக்கிறதே. கண்ணனை ஆனந்தமாய் வரவேற்க தயாரானாள். அவளோடு அவள் சிறுவயது மகனும் தயாரானான். நாளை கண்ணன் வரப்போகிறான். அதனால் இன்றே சீடை எல்லாம் செய்து தயார்செய்துவிடம்மா கூடவே கண்ணனுக்குப் பிடித்த பலகாரங்களும் என்று துள்ளிகுதித்து ஓடினான் கண்ணன் என்னும் பெயர் கொண்ட சிறுவன்.

பக்தை பரபரப்பாக சீடை தயாரிப்பில் ஈடுபட்டாள். பலகாரங்கள் பக்குவமாக வரவே அவளுக்கு இறை அவதார கண்ணனையும், மகன் கண்ணனையும் நினைத்து ஆனந்தமாக இருந்தது. மகன் கண்ணனும் அவளுக்கு பிரியமான வனே. சொல்வதைத் தவறாமல் செய்பவனாயிற்றே. வீட்டிலும் வெளியிலும் நல்ல பிள்ளை என்ற பெயரை பெற்றதால் அவன் எல்லோருக்கும் செல்ல கண்ணனாக இருந்தான். அம்மா கிருஷ்ணன் கோயிலுக்குச் செல்லும் போதெல்லாம் கண்ணனும் கண்ணனைப் பார்க்க கிளம்பிவிடுவான்.

மறுநாள் கண்ணன் பிறந்தநாள். அம்மா பலகாரவகைகளை  அடுக்கினாள். கண்ணன் பள்ளிக்கு கிளம்ப தயாரானான். என்ன கண்ணா இன்று கூட கண் ணனை வணங்காமல் கிளம்புகிறாயே என்று குறைபட்டாள். என்னம்மா நீங்கள் இன்று பள்ளியில் மாறுவேடப்போட்டியில் நான் கண்ணனாக வேடம் இடுகி றேனே. அதனால் நான் போகவேண்டும். நீங்கள் எல்லாவற்றையும் தயார் செய்து விட்டால் நான் சீக்கிரம் வீட்டுக்கு வந்து கண்ணனை அழைப்பேன் என்றான்.

நீ கண்ணனாக வேடம் அணிய போகிறாய் என்றதும் நான் என்ன சொல்வது அதனால் முடிந்தவுடன் சீக்கிரம் வீட்டுக்கு வந்துவிடு என்று பூஜைக்கு ஆயுத்த மானாள். பூஜை தொடங்கும் போது இன்னும் கண்ணன் வரவில்லையே என்று நினைக்கும் போது வாசலில் நிழல் ஆடியது. கண்ணன் அழகாய்ச் சிரித்தப்படி நின்றிருந்தான். வா கண்ணா என்று வரவேற்றவள் கண்ணனுக்கு பூஜை செய்து முடித்து வழிபாடு முடிந்ததும் பலகாரங்களை எடுத்து கண்ணனுக்கு ஊட்டினாள். கண்ணன் வேண்டும் வேண்டும் என்று சாப்பிட்டு கொண்டே இருந்தான். மெல்ல மெல்ல கண்ணா. வயிறு என்னாவது என்று தாய்மனம் பதறினாலும் கண்ணன் உண்பதை ரசித்து பார்த்திருந்தாள். எல்லாவற்றையும் சாப்பிட்டதும் கண்ணன் அம்மாவுக்கு முத்தம் கொடுத்து அம்மா உனக்கு சாப்பிட வைக்காமல் நானே சாப்பிட்டுவிட்டேன் என்று சொல்லி விளையாட செல்வதாக கிளம்பினான்.

அவன் வெளியே சென்ற சில நிமிடங்களில் மாறுவேடத்தில் கண்ணன் வந் தான். அம்மா பூஜை முடிந்துவிட்டதா? சீக்கிரம் சீக்கிரம் பலகாரம் கொடு. பசிக்கிறது என்றான். என்ன கண்ணா விளையாடுகிறாய் இப்போதுதானே எனக்கு கொஞ்சம் வைத்துவிட்டு எல்லாவற்றையும் சாப்பிட்டு போனாய். அதற்குள் வந்து பசி என்கிறாயே என்றாள் செல்ல கோபத்துடன். இல்லையம்மா இப்போதுதான் பள்ளியில் இருந்து வருகிறேன் நான் பொய் சொல் வேனாம்மா என்றான்.

Sharing is caring!